சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி அதிகாரியின் மனைவி தற்கொலை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னிமலை: சென்னிலையில், வங்கி அதிகாரியின் மனைவி, தற்கொலை செய்து கொண்டது, சோகத்தை ஏற்படுத்தியது.திருவாரூர் மாவட்டம், கொடிக்காபாளையத்தை சேர்ந்த வங்கி அதிகாரி வைத்தியநாதன். இவரின் மகள் கீர்த்தனா, 24; மன்னார்குடியை சேர்ந்த அரவிந்த், 31; ஈரோடு ஸ்டேட் வங்கி, உதவி மேலாளர். இருவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சென்னிமலையில், காட்டூர் சாலையில், கணவனுடன்

சென்னிமலை: சென்னிலையில், வங்கி அதிகாரியின் மனைவி, தற்கொலை செய்து கொண்டது, சோகத்தை ஏற்படுத்தியது.


திருவாரூர் மாவட்டம், கொடிக்காபாளையத்தை சேர்ந்த வங்கி அதிகாரி வைத்தியநாதன். இவரின் மகள் கீர்த்தனா, 24; மன்னார்குடியை சேர்ந்த அரவிந்த், 31; ஈரோடு ஸ்டேட் வங்கி, உதவி மேலாளர். இருவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சென்னிமலையில், காட்டூர் சாலையில், கணவனுடன் வசித்தார். குழந்தை பிறக்க தாமதம் ஆவதால், தம்பதியரிடையே அடிக்கடி வாக்குவாதம், தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. வீட்டில் நேற்று மதியம் தனியாக இருந்த கீர்த்தனா, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னிமலை போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இதில் கீர்த்தனா எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில், 'எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை' என்று, எழுதி இருந்ததாக, போலீசார் தெரிவித்தனர். திருமணமாகி இரண்டு ஆண்டே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X