சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த பெண் தீ விபத்தில் சாவு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோட்டில், தீ விபத்தில் காயமடைந்த, திருமணமான இளம்பெண், ஒரு மாதத்துக்கும் மேலாக, சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தார். ஈரோடு, பெரியசேமூர், சாய்பாபா கோவில் அருகே வசிப்பவர் தினேஷ்குமார். தோல் பட்டறை தொழிலாளி. இவர் மனைவி நந்தினி, 23; கடந்த ஆண்டு, டிச.,24ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த, ?ம் தேதி நள்ளிரவில், ஸ்டவ் அடுப்பை நந்தினி பற்ற வைத்தபோது, அவர் மீது தீப்பற்றியது.

ஈரோடு: ஈரோட்டில், தீ விபத்தில் காயமடைந்த, திருமணமான இளம்பெண், ஒரு மாதத்துக்கும் மேலாக, சிகிச்சை பெற்ற நிலையில் இறந்தார். ஈரோடு, பெரியசேமூர், சாய்பாபா கோவில் அருகே வசிப்பவர் தினேஷ்குமார். தோல் பட்டறை தொழிலாளி. இவர் மனைவி நந்தினி, 23; கடந்த ஆண்டு, டிச.,24ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். கடந்த, ?ம் தேதி நள்ளிரவில், ஸ்டவ் அடுப்பை நந்தினி பற்ற வைத்தபோது, அவர் மீது தீப்பற்றியது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மறுநாள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், 21ம் தேதி கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு நேற்று காலை இறந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார், ஈரோடு டவுன் டி.எஸ்.பி., ராஜூ விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X