சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் அரிசி கடத்தி சென்ற வேன் கவிழ்ந்து 2 பேர் காயம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னிமலை: சென்னிமலை அருகே, ரேஷன் அரிசி கடத்தி சென்ற வேன் விபத்தில் சிக்கியது. இருவர் சிக்கினர். சென்னிமலை, பாண்டியன் வீதியை சேர்ந்தவர் செந்தில்நாதன், 56; இவரின் நண்பர் பொன்னுசாமி, 48; இருவரும் நேற்று முன்தினம் மாலை, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிக்கு, ஆம்னி வேனில் சென்றனர். செந்தில்நாதன் ஓட்டிச் சென்றார். சிறுக்களஞ்சி என்ற இடத்தில் சாலையோர பள்ளத்தில் இறங்கி வேன்

சென்னிமலை: சென்னிமலை அருகே, ரேஷன் அரிசி கடத்தி சென்ற வேன் விபத்தில் சிக்கியது. இருவர் சிக்கினர். சென்னிமலை, பாண்டியன் வீதியை சேர்ந்தவர் செந்தில்நாதன், 56; இவரின் நண்பர் பொன்னுசாமி, 48; இருவரும் நேற்று முன்தினம் மாலை, திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளிக்கு, ஆம்னி வேனில் சென்றனர். செந்தில்நாதன் ஓட்டிச் சென்றார். சிறுக்களஞ்சி என்ற இடத்தில் சாலையோர பள்ளத்தில் இறங்கி வேன் கவிழ்ந்தது. இருவரும் லேசான காயம் அடைந்தனர். அதேசமயம் வேனில் இருந்த அரிசி மூட்டைகள் சிதறின. தகவலறிந்து சென்ற சென்னிமலை போலீசார் விசாரித்தனர். இருவரும், 600 கிலோ ரேஷன் அரிசியை, ஊத்துக்குளியில் ஒரு மில்லுக்கு கடத்தி சென்றது தெரிந்தது. குடிமைப்பொருள் பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இருவரையும் கைது செய்து, அப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X