பிரதமர் மோடியுடன் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்துள்ளார்.உ.பி.,யில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 'கோவிட் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை யோகி ஆதித்யநாத் அரசு சரியாக கையாளவில்லை' என, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து
UP, CM, YogiAdityanath, Meets, PMModi, Nadda, Amitshah, உபி, உத்தரபிரதேசம், முதல்வர், யோகி ஆதித்யநாத், பிரதமர், மோடி, சந்திப்பு, நட்டா, அமித்ஷா

புதுடில்லி: இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றுள்ள உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்துள்ளார்.

உ.பி.,யில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. 'கோவிட் பரவலால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை யோகி ஆதித்யநாத் அரசு சரியாக கையாளவில்லை' என, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. மேலும், யோகி ஆதித்யநாத் மீது பா.ஜ., தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகின. இது தொடர்பாக உ.பி., மாநிலத்துக்கான கட்சியின் மேலிட பொறுப்பாளர் ராதா மோகன் சிங், கட்சி யின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனால், முதல்வர் பதவியிலிருந்து ஆதித்யநாத் மாற்றப்படலாம் என, தகவல்கள் வெளியாயின.


latest tamil news



இந்த பரபரப்பான சூழ்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத், 2 நாள் பயணமாக டில்லி சென்றுள்ளார். நேற்று (ஜூன் 10) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த ஆதித்யநாத், மாநில அமைச்சரவையை மாற்றியமைப்பது பற்றி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து, உ.பி., தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. தொடர்ந்து, பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவையும் சந்தித்தார். யோகி ஆதித்யநாத் மீது பா.ஜ., தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharathanban Vs - tirupur,இந்தியா
12-ஜூன்-202110:49:49 IST Report Abuse
Bharathanban Vs தமிழகத்தைவிட உ.பியில் மக்கள் தொகை 3 மடங்கு அதிகம். ஆனால் அங்கு கொரோனா பரவல் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்டு இப்போது தினசரி தொற்று 500 ஆக உள்ளது. இதை கூகுள் தேடலில் நாம் அதிகாரப்பூர்வமாகவே அறிந்து கொள்ள முடியும். ஆனால் யோகி ஆதித்யநாத் குறித்து வேண்டுமென்றே ஒரு மாதமாக அவதூறு பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
12-ஜூன்-202109:37:31 IST Report Abuse
amuthan புதிதாக நூறு கோசலை மற்றும் நூறு கோமிய ஆராச்சி நிலையம் அமைக்க விண்ணப்பம்.
Rate this:
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
11-ஜூன்-202123:08:54 IST Report Abuse
தங்கை ராஜா டீலா நோ டீலா... நாடகத்தின் அடுத்த கட்டம் பற்றி ஆலோசனை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X