பொது செய்தி

தமிழ்நாடு

வீரபாண்டியில் 65 பேருக்கு கொரோனா

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டத்தில், 945 பேருக்கு கொரோனா இருப்பது, நேற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 310 பேர், வீரபாண்டி, 65, சேலம் ஒன்றியம், 61, நங்கவள்ளி, 46, சங்ககிரி, 41, ஓமலூர், 36, தலைவாசல், 33, அயோத்தியாப்பட்டணம், தாரமங்கலம், மகுடஞ்சாவடி தலா, 31, வாழப்பாடி, 29, பனமரத்துப்பட்டி, 28, காடையாம்பட்டி, 26, ஆத்தூர், 21, இடைப்பாடி, 20, மேட்டூர், 19, கொங்கணாபுரம், கொளத்தூர் தலா, 13, மேச்சேரி, 10,

சேலம்: சேலம் மாவட்டத்தில், 945 பேருக்கு கொரோனா இருப்பது, நேற்று உறுதி செய்யப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 310 பேர், வீரபாண்டி, 65, சேலம் ஒன்றியம், 61, நங்கவள்ளி, 46, சங்ககிரி, 41, ஓமலூர், 36, தலைவாசல், 33, அயோத்தியாப்பட்டணம், தாரமங்கலம், மகுடஞ்சாவடி தலா, 31, வாழப்பாடி, 29, பனமரத்துப்பட்டி, 28, காடையாம்பட்டி, 26, ஆத்தூர், 21, இடைப்பாடி, 20, மேட்டூர், 19, கொங்கணாபுரம், கொளத்தூர் தலா, 13, மேச்சேரி, 10, நரசிங்கபுரம், கெங்கவல்லி தலா, 8, ஏற்காடு, 4, பெத்தநாயக்கன்பாளையம் ஒருவர் என, சேலம் மாவட்டத்தில், 885 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்களில் நாமக்கல், 14, தர்மபுரி, 13, கள்ளக்குறிச்சி, 12, ஈரோடு, 11, சென்னை, 8, திருவள்ளூர், 2 என, 60 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம், சேலம் மாவட்டத்தில் மட்டும், 945 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று, 1,141 பேர் குணமாகி வீடு திரும்பினர். 23 பேர் உயிரிழந்தனர். தற்போது, 10 ஆயிரத்து, 168 பேர் சிகிச்சையில் உள்ளனர். 9,080 பேருக்கு சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பூஞ்சைக்கு 14 பேர்: சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார், அரசு மருத்துவமனைகளில், கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்ட, 14 பேர் நேற்று அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், சேலத்தை சேர்ந்த, ஒன்பது பேர், பிற மாவட்டத்தை சேர்ந்த, 5 பேர் ஆகும். இதுவரை கறுப்பு பூஞ்சைக்கு, 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர்.

ஆத்தூரில் 6 பேர் பலி: ஆத்தூர் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டில், 89 பேர், நுரையீரல் தொற்று வார்டில், 123 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில், ஆத்தூர், மேட்டுத்தெரு, 72 வயது ஆண்; ஜோதிநகர், 56 வயது பெண்; மஞ்சினி, 46 வயது ஆண்; கல்லாநத்தம், 70 வயது ஆண்; கொண்டையம்பள்ளி, 54 வயது ஆண்; கள்ளக்குறிச்சி, 50 வயது ஆண் ஆகியோர், நேற்று உயிரிழந்தனர். கடந்த மே முதல், நேற்று வரை, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் மட்டும், 353 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பெத்தநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனையில், பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை சேர்ந்த, 94 வயது ஆண், நேற்று கொரோனாவுக்கு உயிரிழந்தார். இந்த மருத்துவமனையில், நேற்று வரை, ஆறு பேர் இறந்துள்ளனர்.

காய்ச்சல் முகாம்: ஆத்தூர், கம்பன் தெரு, குப்புசாமி தெரு; வக்கீல்கிட்டா முஸ்தபா ஆகிய இடங்களில், நேற்று, மருத்துவர் இளங்கோ தலைமையில் சிறப்பு காய்ச்சல் முகாம் நடந்தது. அதில், 210 பேருக்கு, மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. அறிகுறி உள்ள, 20 பேருக்கு சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X