மரணத்தை மறைத்தது அ.தி.மு.க., அரசு: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரணத்தை மறைத்தது அ.தி.மு.க., அரசு: மின்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

Added : ஜூன் 11, 2021
Share
மேட்டூர்: கொரோனாவால் இறந்த, 440 பேர் விபரங்களை, முந்தைய, அ.தி.மு.க., அரசுதான் மறைத்தது,'' என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார்.மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை, மேட்டூர் அணையில் அதிகாரிகள் மேற்கொண்டனர். இதை, நேற்று மாலை, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி

மேட்டூர்: கொரோனாவால் இறந்த, 440 பேர் விபரங்களை, முந்தைய, அ.தி.மு.க., அரசுதான் மறைத்தது,'' என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குற்றம்சாட்டினார்.


மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், நாளை தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை, மேட்டூர் அணையில் அதிகாரிகள் மேற்கொண்டனர். இதை, நேற்று மாலை, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்ட பின் கூறியதாவது: முதல்வர் ஜூன், 12ல் டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்க உள்ளார். இதற்காக, டெல்டா மாவட்டங்களில் மண்டல வாரியாக விவசாயிகள் கருத்துகளையும் கேட்க உள்ளார். கொரோனா பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறையில் உயிர் காக்கும் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. கொரோனாவால் இறந்த, 440 பேர் விபரங்களை, முந்தைய, அ.தி.மு.க., அரசுதான் மறைத்தது. தற்போது முதல்வர் திறந்த மனப்பான்மையுடன் செயல்படுகிறார். கொரோனா பாதிப்பு நிலவரங்கள், உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பின், மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். கலெக்டர் கார்மேகம், எம்.பி.,க்கள் பார்த்திபன், செந்தில்குமார் உடன் இருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X