பொது செய்தி

தமிழ்நாடு

ஏழை குடும்பங்களுக்கு நிவாரண பொருள் வழங்கல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சங்ககிரி: சங்ககிரி, வைகுந்தம், சங்ககிரி ஆர்.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஆதரவற்ற, 19 ஏழை குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களுக்கு, சங்ககிரி, அமுதச்சுடர் அறக்கட்டளை சார்பில், அரிசி, மளிகை பொருட்கள், நேற்று வழங்கப்பட்டன. அறக்கட்டளை தலைவர் சத்தியபிரகாஷ் தலைமையில் நிர்வாகிகள், அவர்கள் இருப்பிடத்துக்கு சென்று, பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல், சங்ககிரி பேரூராட்சி,

சங்ககிரி: சங்ககிரி, வைகுந்தம், சங்ககிரி ஆர்.எஸ்., உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஆதரவற்ற, 19 ஏழை குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களுக்கு, சங்ககிரி, அமுதச்சுடர் அறக்கட்டளை சார்பில், அரிசி, மளிகை பொருட்கள், நேற்று வழங்கப்பட்டன. அறக்கட்டளை தலைவர் சத்தியபிரகாஷ் தலைமையில் நிர்வாகிகள், அவர்கள் இருப்பிடத்துக்கு சென்று, பொருட்கள் வழங்கப்பட்டன. அதேபோல், சங்ககிரி பேரூராட்சி, பக்காளியூரில், பெற்றோரை இழந்து தாத்தா, பாட்டிகளிடம் வளரும் குழந்தைகள், மாற்றுத்திறனாளி ஒருவர் என, மூன்று குடும்பத்தினருக்கு, தனியார் மருந்தக உரிமையாளர் ஈஸ்வரன், லயன்ஸ் சங்க மண்டல தலைவர் சண்முகம், தலைமையாசிரியை காஞ்சனா ஆகியோர் வழங்கிய, தலா, 25 கிலோ அரிசி சிப்பம், 3 மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களை, நேற்று, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் நிர்வாகிகள் வழங்கினர். கருப்பூர் பேரூராட்சியில் பணிபுரியும், 47 தூய்மை பணியாளர்களுக்கு, த.மா.கா., சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார், 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய், துவரம் பருப்பு ஆகிய நிவாரண பொருட்களை வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X