பொது செய்தி

தமிழ்நாடு

மரியாதை குறைவாக பேசுவதாக நரசிங்கபுரம் கமிஷனர் மீது புகார்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனர், மரியாதை குறைவாக பேசுவதாக, வேளாண் அலுவலர்கள் புகார் அளித்துள்ளனர்.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வேளாண் பட்டதாரிகள் சங்க, மாவட்ட தலைவர் மணி, நேற்று, சேலம் கலெக்டர் கார்மேகம், சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் அசோக்குமாரிடம் அளித்த மனு: நரசிங்கபுரம் நகராட்சியில், மண்டல அலுவலராக உள்ள வேளாண் அலுவலர் கவுதமன், நகராட்சி

நரசிங்கபுரம்: நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனர், மரியாதை குறைவாக பேசுவதாக, வேளாண் அலுவலர்கள் புகார் அளித்துள்ளனர்.


இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வேளாண் பட்டதாரிகள் சங்க, மாவட்ட தலைவர் மணி, நேற்று, சேலம் கலெக்டர் கார்மேகம், சேலம் மண்டல நகராட்சி நிர்வாக இணை இயக்குனர் அசோக்குமாரிடம் அளித்த மனு: நரசிங்கபுரம் நகராட்சியில், மண்டல அலுவலராக உள்ள வேளாண் அலுவலர் கவுதமன், நகராட்சி கமிஷனர் சேகர் மேற்பார்வையில் பணிபுரிகிறார். ஆனால், காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை பணி நிர்பந்தம் செய்வதோடு, மரியாதைக்குறைவாக கமிஷனர் பேசுகிறார். தினமும், 5,000 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் பணத்தை கட்டிவிட்டு செல்லுங்கள் என்கிறார். மேலும், மேல்நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பேன் என அச்சுறுத்துகிறார். வேளாண் அலுவலர் பதவி, நகராட்சி கமிஷனருக்கு இணையானது. ஆனால், வேளாண் அலுவலரை, கடைநிலை ஊழியர் போன்று நடத்துவது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பணிக்கு சரிவர வருவதில்லை! நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் சேகர் கூறியதாவது: இரு மண்டல அலுவலர்களில், வேளாண் அலுவலர் கவுதமன், 5,459 வீடுகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ள வேண்டும். அவர் பணிக்கு சரிவர வருவதில்லை. பணி மேற்கொள்ளும்படி பேசியபோது, வாய் தவறி 'என்னய்யா... பண்ணுகிறீர்' என கேட்டுவிட்டேன். மரியாதை குறைவாக, கடைநிலை ஊழியரை கூட பேசியதில்லை. இதுதொடர்பாக, அவர் பணிக்கு வராதது உள்ளிட்ட காரணங்கள் குறித்து, கலெக்டரிடம் விளக்கம் கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X