பொது செய்தி

தமிழ்நாடு

சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு கூடுதல் இயந்திரம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்து முடிவு தெரிவிக்கப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு, ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனை செய்து முடிவு தெரிவிக்கப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு, ஆய்வகத்தில் உள்ள லேப் டெக்னீஷியன் மூன்று பேருக்கு கொரோனா உள்ளிட்டவையால், தொற்று முடிவு தெரியவர நான்கு நாளுக்கு மேலாகிறது. இதை தவிர்க்க, கூடுதலாக பரிசோதனை இயந்திரங்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுகுறித்து, மருத்துவமனை டீன் வள்ளி கூறியதாவது: பரிசோதனை முடிவு விரைவாக கிடைக்க, தமிழ்நாடு மெடிக்கல் சர்வீஸ் கார்ப்ப ரேஷன் சார்பில், நவீன இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள இயந்திரங்கள் மூலம் தினமும், 5,000 பரிசோதனைகள் செய்யப்பட்டன. தற்போது வந்துள்ள இயந்திரம் மூலம், 3,000 என, தினமும், 8,000 பரிசோதனைகள் செய்து முடிவு அறிவிக்கலாம். பரிசோதனை முடிவு, 24 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு தெரிவிக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம், நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X