பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே வார்டில் 11 பேருக்கு தொற்று; கட்டுப்பாடு பகுதியாக அறிவிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
நரசிங்கபுரம்: நரசிங்கபுரத்தில், ஒரே வார்டில், 11 பேருக்கு தொற்றால், கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் நகராட்சி, 13வது வார்டு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஏ, பி, சி பிரிவுகளில், நான்கு பெண்கள் உள்பட, 11 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது. இப்பகுதியில், மருத்துவ குழுவினர் முகாமிட்டு, 10 பேரை, அவரது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள

நரசிங்கபுரம்: நரசிங்கபுரத்தில், ஒரே வார்டில், 11 பேருக்கு தொற்றால், கட்டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆத்தூர் அருகே, நரசிங்கபுரம் நகராட்சி, 13வது வார்டு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஏ, பி, சி பிரிவுகளில், நான்கு பெண்கள் உள்பட, 11 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டது. இப்பகுதியில், மருத்துவ குழுவினர் முகாமிட்டு, 10 பேரை, அவரது வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினர். ஒருவரை மட்டும், ஆத்தூர் கொரோனா நலவாழ்வு மையத்துக்கு அனுப்பினர். தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் சேகர் தலைமையில் அலுவலர்கள், அப்பகுதியில் கிருமி நாசினி தெளித்து, நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று தெருக்களிலும் தடுப்புகள் அமைத்து, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X