சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனத்தில் அடிபட்டு மயில், பாம்பு பலி

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
வாழப்பாடி: வாழப்பாடி, புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, நேற்று மாலை, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 2 வயதுள்ள ஆண் மயில் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. அதேபோல், முத்தம்பட்டி, வைகை பள்ளி முன், நேற்று மாலை, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 8 அடி நீள சாரைப்பாம்பு வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. ஊரடங்கால், தேசிய நெடுஞ்சாலையில், மக்கள், வாகனங்கள் இயக்கம்

வாழப்பாடி: வாழப்பாடி, புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே, நேற்று மாலை, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 2 வயதுள்ள ஆண் மயில் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. அதேபோல், முத்தம்பட்டி, வைகை பள்ளி முன், நேற்று மாலை, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், 8 அடி நீள சாரைப்பாம்பு வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடந்தது. ஊரடங்கால், தேசிய நெடுஞ்சாலையில், மக்கள், வாகனங்கள் இயக்கம் குறைந்ததால், விலங்குகள், பறவைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வாகனங்களில் சிக்கி இறப்பதாக, வனத்துறையினர் கூறினர்.


மயில் மீட்பு: ஓமலூர், ஓலைப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம், 45. இவரது விவசாய தோட்டத்தில், 50 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. அதில், நேற்று காலை ஆண் மயில் விழுந்து தத்தளித்தது. தகவல்படி, ஓமலூர் தீயணைப்பு துறையினர் வந்து, மயிலை உயிருடன் மீட்டு, காடையாம்பட்டி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின், வனப்பகுதியில் விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X