சம்பவம் செய்தி

தமிழ்நாடு

65 மதுபாட்டில் பறிமுதல்; 5 பேருக்கு காப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சேலம்: கர்நாடகாவின், 65 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை கைது செய்தனர்.சேலம், அம்மாபேட்டை, ஜோதி தியேட்டரை சேர்ந்தவர் மோகன், 32. இவர், தன் வீட்டில், கர்நாடகா மாநில சரக்கு பாட்டில்களை பதுக்கி விற்பதாக, அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம், அவர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், கர்நாடகாவின், 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, மோகனை கைது

சேலம்: கர்நாடகாவின், 65 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரை கைது செய்தனர்.


சேலம், அம்மாபேட்டை, ஜோதி தியேட்டரை சேர்ந்தவர் மோகன், 32. இவர், தன் வீட்டில், கர்நாடகா மாநில சரக்கு பாட்டில்களை பதுக்கி விற்பதாக, அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம், அவர் வீட்டில் சோதனை நடத்திய போலீசார், கர்நாடகாவின், 31 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, மோகனை கைது செய்தனர். ஏத்தாப்பூரை சேர்ந்த முத்து, 24, ஆத்தூர், தென்னம்பிள்ளையூரை சேர்ந்த பிரகாஷ், 36, ஆகியோர், நேற்று முன்தினம் பைக்கில், கர்நாடகாவின், 30 மதுபாட்டில்களை கொண்டு வந்தனர். அவர்களை, கருப்பூர் சுங்கச்சாவடியில், தனிப்படை போலீசார் சோதனை செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். சேலம், பள்ளப்பட்டியை சேர்ந்தவர்கள் சித்துராஜ், 46, ஜெகநாதன், 88. இவர்கள், நேற்று முன்தினம், மாரியம்மன் கோவில் அருகே, மதுபாட்டில்களை வைத்து விற்க முயன்றதை, பள்ளப்பட்டி போலீசார் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, இருவரையும் கைது செய்து, நான்கு மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ரயிலில் கடத்திய 2 பேர்: பெங்களூரு - தூத்துக்குடி சிறப்பு ரயில், நேற்று காலை, 2:20 மணிக்கு, சேலம் ரயில்வே ஜங்ஷனுக்கு வந்தது. அதில், திண்டுக்கல் மாவட்டம், செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த லோகநாதன், 38, வைத்திருந்த இரு பைகளில் சோதனை செய்ததில், 25 மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. அதேபோல், பெங்களூரு - மயிலாடுதுறை சிறப்பு ரயிலில், மயிலாடுதுறையை சேர்ந்த அய்யப்பன், 36, வைத்திருந்த பையில், 15 மதுபாட்டில்கள் இருப்பது தெரிந்தது. ரயில்வே போலீசார், பாட்டில்களுடன் இருவரையும், சேலம் மாநகர மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், இருவரையும் கைது செய்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X