சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் கடத்திய 6 பேர் கைது: 390 லிட்டர், 4 வாகனம் பறிமுதல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் பகுதிகளில், சாராயம் கடத்தி வந்த, 6 பேரை கைது செய்த போலீசார், 390 லிட்டர் சாராயம், நான்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.ஆத்தூர் அருகே, தென்னங்குடிபாளையம், ராமநாயக்கன்பாளையம், செல்லியம்பாளையம், கல்பகனூர் ஆகிய பகுதிகளில், ஆத்தூர் ஊரக போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தென்னங்குடிபாளையம் வழியாக சாராயம் கடத்திவந்த, கல்வராயன்மலை, அடியனூர்

ஆத்தூர்: ஆத்தூர் பகுதிகளில், சாராயம் கடத்தி வந்த, 6 பேரை கைது செய்த போலீசார், 390 லிட்டர் சாராயம், நான்கு வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


ஆத்தூர் அருகே, தென்னங்குடிபாளையம், ராமநாயக்கன்பாளையம், செல்லியம்பாளையம், கல்பகனூர் ஆகிய பகுதிகளில், ஆத்தூர் ஊரக போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, தென்னங்குடிபாளையம் வழியாக சாராயம் கடத்திவந்த, கல்வராயன்மலை, அடியனூர் சக்தி, 26, துரைசாமி, 24, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். அத்துடன், 104 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய, 'ஸ்டார் சிட்டி' பைக்கை பறிமுதல் செய்தனர். ராமநாயக்கன்பாளையத்தில் சாராயம் கடத்திவந்த, மந்தைவெளி பிரவீன்குமார், 22, என்பவரை கைது செய்து, 110 லிட்டர் சாராயம், ஆக்டிவா மொபட்டை பறிமுதல் செய்தனர். அதேபோல், சாராயம் கடத்தி வந்த, ஆத்தூர், மாதாகோவில் பகுதியை சேர்ந்த வெற்றிவேல், 39, என்பவரை கைது செய்து, 108 லிட்டர் சாராயம், 'ஸ்போர்ட்' பைக்கை பறிமுதல் செய்தனர். ஆத்தூர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், தலைவாசல், நாவக்குறிச்சியில், சாராயம் கடத்தி வந்த, சுரேஷ், 34, என்பவரை கைது செய்து, 4 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல், காட்டுக்கோட்டை மாரியம்மன் கோவில் வழியாக, சாராயம் கடத்தி வந்த, சதாசிவபுரத்தை சேர்ந்த முருகேசன், 39, என்பவரை கைது செய்து, 64 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய, 'ஸ்பிளண்டர்' பைக்கையும், போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதரில் பதுக்கியவர்: கெங்கவல்லி அருகே, ஆணையாம்பட்டியை சேர்ந்த குணசேகரன், 42, மாயம்பாடி செல்லதுரை, 36, ஆகியோர், தங்கள் வீடு அருகே உள்ள முட்புதரில் பதுக்கிவைத்து சாராயம் விற்றனர். அவர்களை, நேற்று, கெங்கவல்லி போலீசார் கைது செய்து, தலா, 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். அதேபோல், பனமரத்துப்பட்டி போலீசார், கிடமலை அடிவாரத்திலுள்ள அடி மலைப்பட்டியில், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது, விற்பனை செய்ய, 5 லிட்டர் கள்ளச்சாராயத்தை வீட்டில் பதுக்கி வைத்திருந்த பழனிசாமி, 46, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

27 இடங்களில் கண்காணிப்பு தீவிரம்: சேலம் மாவட்ட வனப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதை தடுக்க, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து, சேலம் மாவட்ட வன அலுலர் முருகன் கூறியதாவது: டேனிஷ்பேட்டை, சேர்வராயன் தெற்கு உள்பட, 9 வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள வனப்பகுதியில், தொடர்ந்து ஒரே இடத்தில் சாராயம் காய்ச்சும் இடங்கள் கண்டறியப்பட்டன. அப்படி, ஒரு வனச்சரகங்களில் தலா, மூன்று வீதம், 27 இடங்கள் இருப்பது தெரிந்தது. இப்பகுதிகளில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இன்று(நேற்று) பெரியகல்வராயன் பிரிவு, குன்னூர் பீட் வனப்பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்ச ஏதுவாக, 5 பேரல்களில் ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, வனத்துறையினர் அழித்தனர். இவ்வாறு அவர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X