கோர்ட் செய்தி

தமிழ்நாடு

இறப்பு சான்றிதழ்களை ஆய்வு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை: கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இணை நோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றுகளை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவிட் தொற்று பாதித்து தன்னுடைய சக வழக்கறிஞர் கண்ணன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவர் மூச்சுத்திணறலால் இறந்தார்
ChennaiHC, Covid, Death Certificate, Examine, TN, Govt, சென்னை, உயர்நீதிமன்றம், கோவிட், கொரோனா, இறப்பு சான்றிதழ், ஆய்வு, தமிழக அரசு

சென்னை: கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு இணை நோய்களால் இறந்தவர்களின் இறப்பு சான்றுகளை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீராஜலட்சுமி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கோவிட் தொற்று பாதித்து தன்னுடைய சக வழக்கறிஞர் கண்ணன் என்பவர் உயிரிழந்த நிலையில், அவர் மூச்சுத்திணறலால் இறந்தார் என சான்று வழங்கப்பட்டது. 'கோவிட் மரணம்' என இறப்பு சான்றிதழில் குறிப்பிடாததால், பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும், குடும்பத்திற்கும் அரசின் நிதியுதவி கிடைக்கப்பெறுவது தடைபடுவதாகவும், கோவிட்டால் ஏற்படும் மரணத்தை இறப்புச் சான்றிதழில் குறிப்பிடவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news



இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, கோவிட் மரணம் முறையாக பதிவு செய்யப்படவில்லை என நாடு முழுவதும் புகார்கள் வந்துகொண்டிருக்கிறது எனக் குறிப்பிட்டனர். மேலும், ‛இறப்பு பற்றி தெளிவான பதிவு இருந்தால்தான் தொற்றை சமாளிக்க, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும். கோவிட் காலத்தில் இணைநோயால் இறந்தவர்களின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்யவேண்டும். இந்த ஆய்வு செய்தது குறித்த ஆரம்பகட்ட அறிக்கையை 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்யவேண்டும்,' என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மன்னிப்பு - Madurai,இந்தியா
12-ஜூன்-202110:37:11 IST Report Abuse
மன்னிப்பு கோவிட்டால் இறந்த பெற்றோரின் குழந்தைகளுக்கு மோடி அரசு பத்து லட்சம் மற்றும் பல சலுகைகளை வழங்குகிறது. ஆனால் கோவிட்டால் மரணம் என்று பதிவு செய்தால் தமிழன் குழந்தைகளுக்கு பல சலுகைகள் கிடைக்கும். ஆனால் அதை செய்ய இந்த தமிழக வட்டரசுக்கு மனம் இல்லை.அப்பாவி குழந்தைகளின் வாழ்வில் விளையாட வேண்டாம். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Kadaparai Mani - chennai,இந்தியா
12-ஜூன்-202109:18:51 IST Report Abuse
Kadaparai Mani மாண்புமிகு எடபடியார் சொன்னது சரியாகிவிட்டது .
Rate this:
Cancel
W W - TRZ,இந்தியா
12-ஜூன்-202109:07:05 IST Report Abuse
W W இப்போது கொடுக்கபடும் இறப்பு சான்றிதலில் இறப்பிற்காண காரணம் என்ற காலமே கொடுக்கப்படவில்லை இதனை மறு பரிசிலனை செய்ய வேண்டும்.எந்த லோகதிலும் இது மாதிறி இறப்பிற்காண காரணம் விட்டு போக வில்லை.ஏன் அதற்கு இந்த பகுபாடு?? இது ஒரு பேஸிக் தவறுதான் இதில் எதோ ஒரு சூட்சமம் உள்ளது.பவப்பட்ட மக்களுகு கிடைக்க வேன்டி ய சொல்ப துகையும் கிடைக்கமல் போய் விடும் . இதனை போன அரசு அப்படி செய்தது அதையே தான் நாங்களும் பாலே செய்கிறோம் என்று கூறிகொள்ள கூடாது, அதனை திருத்த ஆவன செய்ய வேண்டும் .இதை எப்படி கன்பிர்ம் ஆக எழுதிகிறேன் என்றால் இதில் பாதிக்கப்பட்டவர் என் அயல் வீட்டுக்காரர்.இதில் தற்போதுள்ள ஒரு sample Death Certificate யை வேண்டுமானால் கொடுக்க இடம் கொடுத்தால் இணைக்க தாயாரகா ஊள்ளேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X