10ல் 9 ஆப்பிரிக்க நாடுகள் தடுப்பூசியின்றி தவிப்பு: உலக சுகாதார அமைப்பு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பிரிட்டோரியா: '10ல் 9 ஆப்பிரிக்க நாடுகள் கோவிட் தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட முடியாமல் தவிக்கின்றன' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் அதிகப்படியாக கோவிட் தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ளன. ஆனால், ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம்

பிரிட்டோரியா: '10ல் 9 ஆப்பிரிக்க நாடுகள் கோவிட் தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட முடியாமல் தவிக்கின்றன' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் அதிகப்படியாக கோவிட் தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ளன. ஆனால், ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன.

இந்நிலையில், ஆப்பிரிக்காவுக்கான உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மாட்சிடிசோ மொய்தி தெரிவித்துள்ளதாவது:



latest tamil news




தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுவதால் 10ல் 9 ஆப்பிரிக்க நாடுகள் கோவிட் தடுப்பூசி செலுத்தும் இலக்கை எட்ட முடியாமல் தவிக்கின்றன. ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை வரும் செப்., மாதத்துக்குள் தங்கள் மக்கள்தொகையில் 10 சதவீதம் பேருக்குக் கூட கோவிட் தடுப்பூசியைச் செலுத்த முடியாது. இந்த இலக்கைக் கூட ஆப்பிரிக்க நாடுகளால் அடைய முடியாது.

ஆப்பிரிக்க மக்கள் தொகையில் 10ல் ஒரு பங்கினருக்கு தடுப்பூசி செலுத்த 2.5 கோடி தடுப்பூசிகள் தேவைப்படும். தடுப்பூசிகள் கோவிட் தொற்று மற்றும் இறப்பைத் தடுக்கின்றன. எனவே உலக நாடுகள் கோவிட் தடுப்பூசிகளை ஆப்பிரிக்காவுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


latest tamil news




'ஏழை நாடுகளுக்குப் பிற நாடுகள் தடுப்பூசி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் செப்., மாதத்திற்குள் 10 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும்' என, சில நாட்களுக்கு முன், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Chennai,இந்தியா
11-ஜூன்-202115:31:32 IST Report Abuse
Balaji தடுப்பூசி இல்லாம போவட்டும்.. அங்கெல்லாம் கொரோனாவே இல்லையே. அப்புறம் எதுக்கு ஊசி குத்திகினு இருக்கீங்க? ஒண்ணுமே விளங்க மாட்டேங்குதே தெய்வமே...
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
11-ஜூன்-202114:49:05 IST Report Abuse
அசோக்ராஜ் //"10ல் 9 ஆப்பிரிக்க நாடுகள் தடுப்பூசியின்றி தவிப்பு"// 38இல் 37 தமிழக ஒன்றிய மாவட்டங்கள் தடுப்பூசி இருந்தும் தவிப்பு.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
11-ஜூன்-202114:43:55 IST Report Abuse
 N.Purushothaman இந்திய துணைக்கண்டத்துல இருக்குற தமிழ்நாட்டு ஊராட்சியில் கூட இல்லைன்னு அந்த ஊராட்சியோட சுகாதாரத்துறை அமைச்சர் சொன்னாப்புல . ஆனால் அவிங்க ஆளுங்க நடத்தர தனியார் மருத்துவமனைகள்ல தட்டுப்பாடு இல்லாம கிடைக்கிறது ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X