கோவாக்சினுக்கான விண்ணப்பத்தை நிராகரித்தது அமெரிக்கா: கூடுதல் பரிசோதனைக்கு பரிந்துரை

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
வாஷிங்டன்: இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகாலத்திற்கு பயன்படுத்த அந்நாட்டின் ஆக்குஜென் நிறுவனம் விண்ணப்பித்திருந்த நிலையில், அதனை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் ரத்து செய்துவிட்டது. கூடுதல் பரிசோதனை நடத்த கோரியுள்ளது.கோவாக்சின் இந்தியாவின் முதல் சொந்த கோவிட் தடுப்பூசியாகும். ஐதராபாத்தின் பாரத் பயோடெக் மற்றும் இந்திய
கோவாக்சின், அமெரிக்கா, covaxin, america,

வாஷிங்டன்: இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசரகாலத்திற்கு பயன்படுத்த அந்நாட்டின் ஆக்குஜென் நிறுவனம் விண்ணப்பித்திருந்த நிலையில், அதனை அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிறுவனம் ரத்து செய்துவிட்டது. கூடுதல் பரிசோதனை நடத்த கோரியுள்ளது.

கோவாக்சின் இந்தியாவின் முதல் சொந்த கோவிட் தடுப்பூசியாகும். ஐதராபாத்தின் பாரத் பயோடெக் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்சி கவுன்சில் இணைந்து இத்தடுப்பூசியை உருவாக்கியது. இத்தடுப்பூசியை அமெரிக்காவில் பயன்படுத்த அந்நாட்டின் ஆக்குஜென் என்ற நிறுவனம் பாரத் பயோடெக்குடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. அவர்கள் எப்.டி.ஏ., எனப்படும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிறுவனத்திடம், அவசரகால பயன்பாட்டிற்கு கோவாக்சினை அனுமதிக்கக் கோரி விண்ணப்பித்திருந்தனர். அந்த விண்ணப்பத்தை எப்.டி.ஏ., நிராகரித்துவிட்டது. கூடுதல் தகவல்கள் மற்றும் டேட்டாக்களுடன் முழு ஒப்புதலுக்கு விண்ணப்பிக்கும் படி கேட்டுள்ளனர்.

இது பற்றி பேசிய ஆக்குஜென் சி.இ.ஓ., டாக்டர் ஷங்கர் முசுனூரி, “உயிரியல் உரிம விண்ணப்பம் எனப்படும் முழு ஒப்புதலுக்கு விண்ணப்பிக்க எப்.டி.ஏ., பரிந்துரைத்துள்ளது. இதனால் கூடுதல் பரிசோதனைகளை நடத்தி விண்ணப்பிப்போம். கோவாக்சினை அமெரிக்காவிற்கு கொண்டு வருவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்றார்.


latest tamil news
ஆக்குஜென் நிறுவனம் கனடாவில் கோவாக்சினை விற்பனை செய்வதற்கான பிரத்யேக உரிமைகளையும் பாரத் பயோடெக்கிடம் பெற்றுள்ளது. கனடா சுகாதாரத் துறையிடமும் ஒப்புதல் பெற பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. ஒப்புதலுக்கான விண்ணப்பத்தில், வணிக ரீதியாக கோவாக்சின் பயன்பாட்டுக்கு வந்த ஒரு மாதத்தில், பாரத் பயோடெக்கிற்கு 73 கோடி ரூபாய் செலுத்த ஒப்புக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - ghala,ஓமன்
12-ஜூன்-202111:24:16 IST Report Abuse
sankar PFIZER ஒரு டோசின் விலை 30 டாலர் , COVAXIN விலை வெறும் 5 டாலர் தான் ,COVAXIN க்கு அனுமதி குடுத்தா, PFIZER MODERNA போன்ற நிறுவனம் கல்லா கட்ட முடியாது .
Rate this:
Cancel
aggsys -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூன்-202110:37:22 IST Report Abuse
aggsys america loots people health and money in various form,they only pharmaceutical companies to run in the world, and to be always rule the world, others shouldnt enter, and indians( all kind) in America prepare sketch how to loot money in india.
Rate this:
Cancel
Ram Ram - கொங்கு நாடு,இந்தியா
12-ஜூன்-202102:00:34 IST Report Abuse
Ram Ram மேற்குலக நாடுகளால் இந்தியாவின் சாதனையை ஜீரணிக்க முடியவில்லை . அமெரிக்காவின் பாச்சி சமீபத்தில் தான் கவாக்ஸினை புகழ்ந்து பேசி இருந்தார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X