பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும்

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை ஒட்டி உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்க வடமேற்கு திசையில் நிகர்ந்து ஒடிசாவை கடக்கக்கூடும்.இதன் காரணமாக,தமிழகத்தில் அடுத்த 2
TN,Tamilnadu,Weather,தமிழகம்,தமிழ்நாடு,வானிலை

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை ஒட்டி உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்க வடமேற்கு திசையில் நிகர்ந்து ஒடிசாவை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக,

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு (ஜூன் 11, 12) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news





ஜூன் 13,14



மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒர சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 4, ஹாரிசன் எஸ்டேட் பகுதியில் 2 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை




வங்கக்கடல் பகுதிகள்




ஜூன் 11 முதல் 13 வரை



தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.


அரபிக்கடல் பகுதிகள்




ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை



கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்


ஜூன் 11 முதல் 15



தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் புவியரசன் கூறிஉள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X