மே.வங்கத்தில் திடீர் திருப்பம்; மீண்டும் திரிணமுல்லுக்கு திரும்பினார் முகுல் ராய்

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
கோல்கட்டா: திரிணமுல் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து தேசிய துணை தலைவராக நியமிக்கப்பட்ட முகுல் ராய், இன்று மீண்டும் முதல்வர் மம்தா முன்னிலையில் திரிணமுல் காங்கிரசிலேயே இணைந்தார். அவரது மகனும் திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்.திரிணமுல் காங்., உருவானதில் இருந்து அதில் இருந்த மூத்த தலைவர் முகுல் ராய், கடந்த 2017ல், பா.ஜ.,வில் இணைந்தார். பின்னர், அவர் பா.ஜ., கட்சியின்
WestBengal, MukulRoy, TMC, BJP, Mamata, NationalVicePresident, மேற்குவங்கம், முகுல் ராய், திரிணமுல் காங்கிரஸ், பாஜக

கோல்கட்டா: திரிணமுல் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து தேசிய துணை தலைவராக நியமிக்கப்பட்ட முகுல் ராய், இன்று மீண்டும் முதல்வர் மம்தா முன்னிலையில் திரிணமுல் காங்கிரசிலேயே இணைந்தார். அவரது மகனும் திரிணமுல் காங்கிரசில் இணைந்தார்.

திரிணமுல் காங்., உருவானதில் இருந்து அதில் இருந்த மூத்த தலைவர் முகுல் ராய், கடந்த 2017ல், பா.ஜ.,வில் இணைந்தார். பின்னர், அவர் பா.ஜ., கட்சியின் தேசிய துணை தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக பலரும் திரிணமுல் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் ஐக்கியமானார்கள். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் திரிணமுல் காங்., அமோக வெற்றிப்பெற்றதை மம்தா 3வது முறையாக முதல்வரானார். இந்த தேர்தலில் முகுல் ராய், பா.ஜ., சார்பில் உத்தர கிருஷ்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.


latest tamil newsஇதற்கிடையே, மம்தா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற பலரும் மீண்டும் அக்கட்சிக்கு திரும்ப உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதில், முகுல் ராய் திரிணமுல் காங்.,க்கு திரும்புவதாக வெளியான தகவல் முக்கியமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கோல்கட்டாவில் உள்ள திரிணமுல் காங்., கட்சி அலுவலகத்திற்கு முகுல் ராய் வருகை தந்தார். அங்கு மம்தாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர், மம்தா முன்னிலையில், திரிணமுல் காங்கிரசில் இணைத்து கொண்டார்.

திரிணமுல் காங்., கட்சியில் இருந்து விலகி பாஜ., தேசிய துணை தலைவராக பொறுப்பேற்றவர், மீண்டும் திரிணமுல் கட்சிக்கே சேரயிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


latest tamil news
இதன் பின்னர் நிருபர்களை சந்தித்த முதல்வர் மம்தா கூறியதாவது: முகுல்ராய் மீண்டும் தாய்கழகத்திற்கே வந்துள்ளார். கட்சியில் அவர் முக்கிய பங்கு வகிப்பார் என தெரிவித்தார்.


latest tamil news
முகுல்ராய் கூறியதாவது:
தற்போதைய சூழ்நிலையில் யாரும் பா.ஜ.,வில் நீடிக்க முடியாது. அங்கு சென்ற அனைவரும் மீண்டும் கட்சிக்கு திரும்பிவிடுவார்கள் என தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
11-ஜூன்-202123:05:25 IST Report Abuse
தங்கை ராஜா எல்லாம் மாறும். பிஜேபி அழிய வேண்டிய நேரம் வந்துவிட்டது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
11-ஜூன்-202122:09:06 IST Report Abuse
sankaseshan Puccaa opportunists his political future is finished like ssiko .he will be looked suspiciously. Temporarily adangalidari victorious. Wait and see development
Rate this:
Cancel
11-ஜூன்-202121:10:16 IST Report Abuse
ts Balasubramaniam Shameless creatures. Gone back to lick the boots.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X