டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்; இந்திய வீரர்களைக் காக்க அரசின் திட்டம்

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பான் யோஷிஹிடே சுகா அரசு திட்டமிட்டு வருகிறது.இதற்காக பல்வேறு ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெற்ற 100 இந்திய வீரர்கள் வரும் ஜூலை மாதம் ஜப்பானுக்குச் செல்ல உள்ளனர். தற்போது கோவிட் வைரஸ் தாக்கம் ஜப்பானில் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு மிக கவனமாக ஒலிம்பிக் போட்டிகளை
Tokyo Olympics, Sports Ministry, Decides, Not To Send, Delegation

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பான் யோஷிஹிடே சுகா அரசு திட்டமிட்டு வருகிறது.

இதற்காக பல்வேறு ஒலிம்பிக் போட்டிகளில் தகுதி பெற்ற 100 இந்திய வீரர்கள் வரும் ஜூலை மாதம் ஜப்பானுக்குச் செல்ல உள்ளனர். தற்போது கோவிட் வைரஸ் தாக்கம் ஜப்பானில் அதிகரித்து வருவதால் இந்த ஆண்டு மிக கவனமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பான் அரசும் ஒலிம்பிக் நிர்வாகமும் திட்டமிட்டுள்ளது. இதற்காக பிரத்யேகமாக போட்டி நடக்கும் இடத்தில் பிசியோதெரபிஸ்ட், அவசர உதவிக்கு மருத்துவர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஜப்பானில் 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை நடத்தலாமா வேண்டாமா என்ற முடிவு உறுதியானது. உலக நாடுகள் பலவற்றில் இருந்து இந்த போட்டியில் கலந்துகொள்ள வீரர்கள் பலர் போட்டிக்கு வருகை தர உள்ளனர். வழக்கமாகப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களில் மூன்றில் ஒரு பங்கு வீரர்கள் மட்டுமே தற்போது வைரஸ் காரணமாக வருகை தர உள்ளனர்.

டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய அரசின் உத்தரவின் பேரில் ஒலிம்பிக் மிஷன் செல் அமைக்கப்படவுள்ளது. இதன்மூலமாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுக்குத் தேவையான உதவிகளை இந்திய அரசு செய்யத் திட்டமிட்டுள்ளது.


latest tamil news


பேட்மிட்டன், பாக்சிங், ஹாக்கி, மல்யுத்தம், வில் வித்தை, வாள் சண்டை, துப்பாக்கி சுடுதல் போட்டி மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்கள் தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இவர்களை பத்திரமாக டோக்கியோவுக்கு அழைத்துச்சென்று மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X