சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்குறைந்த காற்று மாசுஉலகில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமலான ஊரடங்கு காரணமாக காற்று மாசு அளவு (வாகனங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஸ் ஆக்சைடு அளவு) 2020 ஜூனில் 15 சதவீதம் குறைந்தது. அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் காற்று மாசு அளவு 25 சதவீதம் வரை குறைந்தது. ஆசியாவின் சில நகரங்களில் காற்று மாசு பாதி அளவு குறைந்தது என செயற்கைக்கோள் தரவுகளின்

அறிவியல் ஆயிரம்
குறைந்த காற்று மாசு
உலகில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமலான ஊரடங்கு காரணமாக காற்று மாசு அளவு (வாகனங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஸ் ஆக்சைடு அளவு) 2020 ஜூனில் 15 சதவீதம் குறைந்தது. அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் காற்று மாசு அளவு 25 சதவீதம் வரை குறைந்தது. ஆசியாவின் சில நகரங்களில் காற்று மாசு பாதி அளவு குறைந்தது என செயற்கைக்கோள் தரவுகளின் படியான நாசா ஆய்வு தெரிவித்துள்ளது. ஊரடங்கு இல்லையெனில் இந்தளவுக்கு காற்று மாசு குறைவதற்கு 15 ஆண்டுகள் தேவைப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
குழந்தை தொழிலாளர் முறையை உலக நாடுகள் ஒழிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 12ல் உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப் படுகிறது. 'இப்போது செயல்படுங்கள்: குழந்தை தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து. உலகில் 5 - 17 வயதுக்குட் பட்ட குழந்தைகளில் 10 பேருக்கு ஒன்று குழந்தை தொழிலாளியாக உள்ளது. உலகளவில் 16 கோடி குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். இதில் அதிகமாக 70 சதவீதம் விவசாய தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 20% சேவை, 10% தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X