பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 15,759 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூன் 11, 2021 | Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 15,757 பேரும் மற்ற மாநிலத்தவர் இருவரையும் சேர்த்து 15,759 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 378 பேர் உயிரிழந்து உள்ளனர். 29,243 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 21 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 30 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.இது தொடர்பாக

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 15,757 பேரும் மற்ற மாநிலத்தவர் இருவரையும் சேர்த்து 15,759 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 378 பேர் உயிரிழந்து உள்ளனர். 29,243 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 21 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 30 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.



latest tamil news




இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 82,586 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 15,759 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,24,597 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 2,96,07,865 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 8,769 பேர் ஆண்கள், 6,990 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 13,62,204 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 9,62,355 ஆகவும் அதிகரித்து உள்ளது. 29,243 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,20,889 ஆக உயர்ந்தது.

378 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 138 பேர் தனியார் மருத்துவமனையிலும், 240 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 28,906 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news





மாவட்டம் வாரியாக படுக்கை விவரம்


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஜூன்-202116:08:30 IST Report Abuse
ஆப்பூ ஆனால் தமிழ்நாடு அரசாங்கம் கொடுத்த கணக்கைப் பார்த்தால் வித்தியாசமாகத் தெரிகிறது கீழே இன்று டேட்டா பார்க்கவும்
Rate this:
Cancel
12-ஜூன்-202116:08:33 IST Report Abuse
ஆப்பூ ஆனால் தமிழ்நாடு அரசாங்கம் கொடுத்த கணக்கைப் பார்த்தால் வித்தியாசமாகத் தெரிகிறது கீழே இன்று டேட்டா பார்க்கவும்
Rate this:
Cancel
subramanian - Madurai,இந்தியா
12-ஜூன்-202113:05:28 IST Report Abuse
subramanian Today occupancy as per list O2 beds 28348 + non O2 beds 10978 + ICU beds 8333 Total 47659 beds. But in the first new cases are mentioned as 15,759. whether it is correct figure. if it so, the home treatment is 1,27,143, whether it is correct. or any difference. please clarify.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X