சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'டிவி'யில் முகம் தெரியணும்!

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
'டிவி'யில் முகம் தெரியணும்!விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், கலெக்டர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஏராளமான தி.மு.க.,வினர் மேடையை சூழ்ந்து
பக்க வாத்தியம்


'டிவி'யில் முகம் தெரியணும்!



விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது.சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், கலெக்டர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஏராளமான தி.மு.க.,வினர் மேடையை சூழ்ந்து நின்றனர்.இதை பார்த்த அமைச்சர் மஸ்தான், 'இந்த மாதிரி, சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக நின்றால், கலைஞர் 'டிவி'யில், இதை ஒளிபரப்ப மாட்டார்கள். அதனால், தயவு செய்து சமூக இடைவெளியுடன்
நில்லுங்கள்' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர், 'மக்களுக்கு கொரோனா பரவுவது எல்லாம், அமைச்சருக்கு முக்கியமில்லை... 'டிவி'யில் அவர் முகம் தெரியணும், அது தான் முக்கியம்' என்றதும், சுற்றியிருந்தோர் அதை ஆமோதித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-ஜூன்-202106:04:40 IST Report Abuse
D.Ambujavalli வெறும் மனு வாங்குவது கூட டிவியில் வந்தாகணுமா? இவர்களால் மூன்றாவது அலை என்ன, முன்னூறு வந்தால் கூட கூட்டம் கூட்டி நோயைப் பரப்பாமல் இருக்க முடியாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X