சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

என்ன தான் நடக்குது?

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
என்ன தான் நடக்குது?'இது என்ன புது நடைமுறையாக இருக்கிறதே...' என, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாரை பற்றி, அந்த கட்சினர் ஆச்சரியத்துடன் பேசுகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஜிதின் பிரசாதா, சமீபத்தில் பா.ஜ.,வில் ஐக்கியமானார். இவரது தந்தை ஜிதேந்திர பிரசாத், காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசி; முன்னாள் பிரதமர்

அக்கம் பக்கம்


என்ன தான் நடக்குது?



'இது என்ன புது நடைமுறையாக இருக்கிறதே...' என, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமாரை பற்றி, அந்த கட்சினர் ஆச்சரியத்துடன் பேசுகின்றனர். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ஜிதின் பிரசாதா, சமீபத்தில் பா.ஜ.,வில் ஐக்கியமானார். இவரது தந்தை ஜிதேந்திர பிரசாத், காங்கிரஸ் கட்சியின் தீவிர விசுவாசி; முன்னாள் பிரதமர் ராஜிவுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தவர். காங்கிரஸ் பாரம்பரியத்தில் வந்த ஜிதின் பிரசாதா, பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடித்ததை, மேலிட தலைவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அவரை கண்டித்து, முக்கிய தலைவர்களில் ஒருவர் கண்டன அறிக்கை வெளியிடுவார் என, கட்சியினர்
நினைத்தனர். ஆனால், கர்நாடக மாநில காங்., தலைவரும், அம்மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான சிவகுமார், இந்த விஷயத்தில் சம்பந்தம் இல்லாமல் ஆஜராகி, ஜிதின் பிரசாதாவை கடுமையாக கண்டித்தார். 'ஜிதின் பிரசாதாவுக்கு அடையாளம் கொடுத்ததே, காங்கிரஸ் தான். இப்போது அவர் சாப்பிடும் சாப்பாடு கூட, நேரு, இந்திரா குடும்பத்தினர் போட்டது தான். நன்றி மறந்த ஜிதின் பிரசாதாவுக்கு, காலம் பாடம் புகட்டும்' என, சாபம் விட்டார் சிவகுமார்.
இதை கேள்விப்பட்ட காங்., நிர்வாகிகள், 'காங்கிரசில் எத்தனையோ மேலிட தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளனர். உ.பி.,யைச் சேர்ந்த ஜிதின் பிரசாதாவுக்கு, கர்நாடகாவை சேர்ந்த சிவகுமார் எதற்கு கண்டனம் தெரிவிக்கிறார். கட்சியில் என்ன நடக்கிறது...' என, குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
12-ஜூன்-202115:16:08 IST Report Abuse
r.sundaram அவருக்கு காங்கிரெஸ்த்தான் சாதம் போடுகிறது என்றால் அவ்வளவு வறுமையான குடும்பத்தை சேர்ந்தவரா இந்த பிரசாத்? இப்படி எத்தனை பேருக்கு சோறு போடுகிறது காங்கிரஸ்? அப்படி சோறு போடுவதால்தான் பெரும்பான்மை காங்கிரெஸ்க்காரர்கள் கட்சியில் இருக்கின்றனரா? இதைவிட நல்ல சோறு போட்டால் வேறு கட்சிக்கு போய்விடுவார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X