பொது செய்தி

தமிழ்நாடு

சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர் கால்நடை கடன் வழங்க கோரிக்கை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
தர்மபுரி: 'தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை கடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க, தர்மபுரி மாவட்ட செயலாளர் பிரதாபன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் சிறு, குறு விவசாயிகள் அதிகளவில்

தர்மபுரி: 'தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வங்கிகள், கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை கடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க, தர்மபுரி மாவட்ட செயலாளர் பிரதாபன் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் சிறு, குறு விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்களில் பயிர் கடன் விவசாய, பயிர் கடன் தர மறுக்கப்படுகிறது. நிலமற்ற விவசாயிக்கும் கால்நடை கடன் வழங்க மறுக்கப்படுகிறது. கடந்த, 8 ல், தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமையில் நடந்த வங்கியாளர்கள் கூட்டத்திலும், சிறு, குறு விவசாயிகளுக்கு கடன் உதவி குறித்து விவாவதிக்கப்படாது, ஏமாற்றம் அளிக்கிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய மயமாக்கப்பட்ட, கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் கடன், பயிர் கடன் வழங்கவும், நிலமற்ற விவசாயிகளுக்கு கால்நடை வாங்க கடன் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X