சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி: இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு காங்கிரசின் பங்கு முக்கியமானது; அதை யாரும் மறுக்க முடியாது. அதே வேளையில், இந்தியாவை வெறும் ஒன்றியம் என்று, தி.மு.க., குறிப்பிடுவதை, காங்கிரஸ் ஏன் வேடிக்கை பார்க்கிறது... காங்கிரசின் தேசிய அடையாளம் என்ன?'டவுட்' தனபாலு: அது தான் பலருக்கும், 'டவுட்'டாக இருக்கிறது. காங்கிரஸ் தன்


'டவுட்' தனபாலு


புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணி தலைவர் ஷியாம் கிருஷ்ணசாமி:
இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு காங்கிரசின் பங்கு முக்கியமானது; அதை யாரும் மறுக்க முடியாது. அதே வேளையில், இந்தியாவை வெறும் ஒன்றியம் என்று, தி.மு.க., குறிப்பிடுவதை, காங்கிரஸ் ஏன் வேடிக்கை பார்க்கிறது... காங்கிரசின் தேசிய அடையாளம் என்ன?

'டவுட்' தனபாலு: அது தான் பலருக்கும், 'டவுட்'டாக இருக்கிறது. காங்கிரஸ் தன் அடையாளத்தை இழந்து, 30 - 40 ஆண்டுகள் ஆகிவிட்டன என்கின்றனர், நடுநிலையாளர்கள். ஏனெனில், மாநிலத்திற்கு மாநிலம் கொள்கை முரண் கூட்டணி. பெரும்பாலும் எடுப்பார் கைப்பிள்ளை மாதிரி தான் காங்., நிலை இப்போது!


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்:
தேசிய அளவிலான தினசரி கொரோனா தொற்று, தொடர்ந்து ஒரு லட்சத்திற்கும் குறைவாகவே இருப்பது மிகவும் நிம்மதியளிக்கிறது. ஆனாலும், தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் தான் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தை கடைசி இடத்திற்கு கொண்டு வர, தமிழக மக்களாகிய உங்களால் முடியும்.

'டவுட்' தனபாலு: இது, தமிழக மக்கள் கையில் தான் உள்ளது என்றாலும், ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்களின் பங்கும் இதில் முக்கியம். எந்த அரசியல் கட்சியும், தன் கட்சியினரை வீட்டில் இருக்க சொல்வதில்லை. விழாக்கள், போராட்டம், விளம்பரம் என, கட்சியினர் கூட்டம் கூட்டமாக வலம் வந்தபடி இருக்கின்றனர். இந்நிலை நீடித்தால், கொரோனா கட்டுக்குள் வருவது, 'டவுட்' தான்!


தி.மு.க., தலைவர் ஸ்டாலின்:
திருச்சி, தஞ்சாவூர் செல்கிறேன். கட்சியினர், என்னை நேரில் சந்திப்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம்; வரவேற்பு அலங்காரங்கள் வேண்டாம். நீங்களும், நானும் ஊரடங்கு கால நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். கடமையை நான் நிறைவேற்ற வேண்டியிருப்பதால்,- கண்ணியமிக்க செயல்பாடு என்பது, நீங்கள் கட்டுப்பாடு காப்பது தான்.

'டவுட்' தனபாலு: உங்கள் பேச்சை கட்சியினர் மதித்து நடப்பது, 'டவுட்' தான். ஏனெனில், கடந்த ஒரு மாதமாக, சென்னையில் சிறிய விழா என்றாலும், உங்கள் கட்சியின் 300 - 400 பேர் திரண்டு விடுகின்றனர். 'பிரஸ் மீட்'டில் அதிகாரிகளும் சுற்றி நின்று கொள்கின்றனர். ஒரே ஜனத்திரள் தான். கொரோனா நேரம் என்றெல்லாம் உங்கள் ஆட்கள் பார்ப்பதில்லை. அதனால் தான் தொற்று இன்னும் பரவி வருகிறதோ என்ற, 'டவுட்'டும் வருகிறது!

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suppan - Mumbai,இந்தியா
12-ஜூன்-202111:49:22 IST Report Abuse
Suppan "கடமையை நான் நிறைவேற்ற வேண்டியிருப்பதால்,- கண்ணியமிக்க செயல்பாடு என்பது, நீங்கள் கட்டுப்பாடு காப்பது தான்."இந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு" ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு வந்து பல வருடங்களாகிவிட்டனவே. சொல்லப் போனால் இவை கழகக் கண்மணிகளுக்கு எப்பொழுதுமே இருந்ததில்லை.இதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்குத்தான். இதைப்போய் சீரியஸாக எடுத்துக் கொள்ளலாமா?
Rate this:
Cancel
a natanasabapathy - vadalur,இந்தியா
12-ஜூன்-202109:40:35 IST Report Abuse
a natanasabapathy கொரானா காலத்திலும் விளம்பரம் தேடுவதையே குறிக்கோளாக கொண்டுள்ளனர் திறப்பு விழாக்களும் கொடியேற்றமும் அவசியமா. 10 படுக்கைகள் அமைப்பதை கூட அமைச்சர் வந்து தான் திறந்து வைக்கிறார் விளம்பரம் இல்லாமல் இவர்களால் உயிர் வாழ இயலாது. அறிக்கை கள் மக்களை ஏமாற்றவே
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-ஜூன்-202106:02:19 IST Report Abuse
D.Ambujavalli திருப்பூரில் உதயநிதி நிவாரணம் வழங்க ஒரு விழா. அதில் முண்டியடித்து கூட்டம் அதைக் கேள்வி கேட்கவோ, அவர் இது மாதிரி தொண்டர்களுக்கு ‘அறிவுரையோ’ கூறவில்லையே அங்கு கொரானா பரவாதா? அதற்கு கூட தெரியும் போல, ‘இளவரசர்’ நடத்தும் கூட்டத்துக்கு போக்க கூடாதென்று
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X