பொது செய்தி

தமிழ்நாடு

செடியில் வீணாகும் தக்காளி; சாலையில் கொட்டும் அவலம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
பாப்பிரெட்டிப்பட்டி: ஊரடங்கு காரணமாக தக்காளியை விலைக்கு வாங்க ஆளில்லாத காரணத்தால், சாலையில் கொட்டும் அவல நிலை தொடர்கிறது.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, மோளையானூர் ,வெங்கடசமுத்திரம், மஞ்சவாடி, மெணசி, முள்ளிக்காடு, தென்கரை கோட்டை,பையர்நத்தம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், 1, 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

பாப்பிரெட்டிப்பட்டி: ஊரடங்கு காரணமாக தக்காளியை விலைக்கு வாங்க ஆளில்லாத காரணத்தால், சாலையில் கொட்டும் அவல நிலை தொடர்கிறது.


தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, மோளையானூர் ,வெங்கடசமுத்திரம், மஞ்சவாடி, மெணசி, முள்ளிக்காடு, தென்கரை கோட்டை,பையர்நத்தம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில், 1, 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஏக்கர் தக்காளி சாகுபடி செய்து அறுவடை செய்ய, 5,000 ரூபாய் வரை செலவாகிறது. இப்பகுதியில் விளையும் தக்காளி கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட அண்டை மாநிலத்திற்கு தக்காளிகள் ஏற்றுமதி செய்து அனுப்பி வைக்கப்படும். கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், வியாபாரிகள் தக்காளியை வாங்கி செல்ல வரவில்லை. செடிகளில் பழங்கள் அழுகி வீணாகி வருகின்றன. கூலி ஆட்களை வைத்து தக்காளியை அறுவடை செய்து விற்பனைக்கு வெளியில் அனுப்ப முடியாமலும், உள்ளூரில் விற்க முயன்றாலும் அதற்கு உரிய விலை கிடைக்காமலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அறுவடை செய்யும் தக்காளிகள் வீணாக ரோட்டில் கொட்டும் அவலம் நிலை தொடர்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X