பொது செய்தி

தமிழ்நாடு

வனப்பகுதி குரங்குகளுக்கு பழம் வழங்கும் வாலிபர்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி, தொப்பூர் வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு, மாம்பழங்களை வழங்கி, அவற்றின் பசியைபோக்கி வரும் தர்மபுரியை சேர்ந்த வாலிபர்.தர்மபுரி மாவட்டம், தொப்பூர் வனப்பகுதி முத்தம்பட்டியில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, பன்டிகை, சனி மற்றும் அமாவாசை நாட்களில், திரளான பக்தர்கள் வந்து செல்வர். நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டியில் இருந்து,

தர்மபுரி: தர்மபுரி, தொப்பூர் வனப்பகுதியில் வசிக்கும் குரங்குகளுக்கு, மாம்பழங்களை வழங்கி, அவற்றின் பசியைபோக்கி வரும் தர்மபுரியை சேர்ந்த வாலிபர்.


தர்மபுரி மாவட்டம், தொப்பூர் வனப்பகுதி முத்தம்பட்டியில், வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, பன்டிகை, சனி மற்றும் அமாவாசை நாட்களில், திரளான பக்தர்கள் வந்து செல்வர். நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டியில் இருந்து, ஆஞ்சநேயர் கோவிலுக்கு வர, 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு வனப்பகுதி உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள், இந்த சாலையில் உள்ள குரங்குகளுக்கு, பழங்கள் மற்றும் உணவு உள்ளிட்டவைகளை வழங்கி வந்தனர். கொரோனா தொற்று பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால், கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வரவில்லை. பக்தர்களை நம்பியிருந்த குரங்குகள், உணவின்றி தவித்து வந்தன. தர்மபுரி டவுன் பஸ்ஸ்டாண்டு அருகில் பழக்கடை நடத்தி வரும் ராமு, 30, குரங்குகளுக்கு, மாம்பழங்கள் வழங்கி பசியாற்றி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: தொப்பூர் வனப்பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு, சுவாமியை வழிபட வந்த பக்தர்கள், வனத்தில் வசிக்கும் குரங்குகளுக்கு உணவளித்து வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவால், கோவில்கள் திறக்க அனுமதியில்லை. இதனால், உணவின்றி தவித்த குரங்குகளுக்கு, போதிய விலையில்லாத மற்றும் சிறிய அளவில் அழுகல் உள்ள மாம்பழங்களை, ஒரு மாதமாக வழங்கி வருகிறேன். வராத்துக்கு மூன்று நாட்கள் வந்து, குரங்குகளுக்கு பழம் வங்குவேன். வனத்தில் வசிக்கும் குரங்குகள், என்னுடன் சகஜமாகி பழகி வருவது மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X