சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

களை முளைக்குது மிஸ்டர் ஸ்டாலின்!

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
களை முளைக்குது மிஸ்டர் ஸ்டாலின்!ஏ.குமாரி, அழகர்கோவில், மதுரை யிலிருந்து எழுதுகிறார்: 'பொய்யுரையும் வேண்டாம், புகழுரையும் வேண்டாம்; உண்மையை மட்டுமே சொல்லுங்கள்' எனத் துவங்கி, 'அம்மா உணவகம்' மீது, உங்கள் கட்சியினர் தாக்குதல் நடத்தியபோது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது; 'உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டாம்; பழைய பெயரிலேயே தொடரட்டும்' என்று சொன்ன பெருந்தன்மை;


களை முளைக்குது மிஸ்டர் ஸ்டாலின்!ஏ.குமாரி, அழகர்கோவில், மதுரை யிலிருந்து எழுதுகிறார்: 'பொய்யுரையும் வேண்டாம், புகழுரையும் வேண்டாம்; உண்மையை மட்டுமே சொல்லுங்கள்' எனத் துவங்கி, 'அம்மா உணவகம்' மீது, உங்கள் கட்சியினர் தாக்குதல் நடத்தியபோது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தது; 'உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டாம்; பழைய பெயரிலேயே தொடரட்டும்' என்று சொன்ன பெருந்தன்மை; கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,வான விஜயபாஸ்கரை சேர்த்தது என ஒவ்வொரு நடவடிக்கையும், தற்போதைய முதல்வர் வித்தியாசமானவர் என்ற எண்ணத்தை விதைத்துள்ளது.இது அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால் மக்கள் மனதில் முதல்வரைப் பற்றிய நல்லெண்ணம் பெரிய விருட்சமாக வளரும். ஆனால், செடிகளின் வளர்ச்சியைத் தடுக்கும் களைகளாக, அவருக்கு கீழ் உள்ளவர்களின் நடவடிக்கைகள் இருக்கின்றன.முதல் அமைச்சரவை கூட்டத்தில், அதிகாரிகளை வெளியே அனுப்பி விட்டு, 'அமைச்சர்கள் யாரும் காவல் துறையினர் பணியில் தலையிடக் கூடாது. அவர்களுடன் நேரடியாக பேசக் கூடாது. ரொம்ப முக்கியம் என்றால், என்னிடம் சொல்லுங்கள்' என்று சொன்னதாக செய்திகள் வந்தபோது, காவல் துறையினர் மட்டுமல்ல; பொதுமக்களும் சந்தோஷப்பட்டனர். ஆனால், கட்சிக்காரர்கள் காவலர்களிடம் பிரச்னை செய்தபடி இருக்கின்றனர்.

கடந்த மாதம் வரை, காவலர்கள் மீது இருந்த மரியாதையும், பயமும் இன்று காணாமல் போய்விட்டதற்கு ஒரே காரணம், இன்று காவலர்களின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. அமைச்சர்கள் தான் சிபாரிசுக்கு வரவில்லையே தவிர, வட்டம், நகரம் என கீழ்மட்ட தலைவர்கள், சிபாரிசுக்கு வந்தபடி உள்ளனர். அவர்களை எதிர்த்துப் பேசினால், 'டிரான்ஸ்பர்' நிச்சயம் என்பதற்கு, தஞ்சாவூரில் நகர செயலரிடம் பேசிய, காவல் சார்பு ஆய்வாளரை ஆயுதப் படைக்கு மாற்றியதே சான்று.
'காவல் துறையில் உள்ளவர்கள் எல்லாம் உத்தம புத்திரர்கள்; தவறே செய்யாதவர்கள்' என்று சொல்ல வரவில்லை; ஆனாலும், கொரோனா பரவும் இந்த காலத்திலும், உயிரை பணயம் வைத்து பணிபுரிவதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.காவலர்களின் கைகள் கட்டப்பட்டு அவர்கள் செயல் இழக்க ஆரம்பித்தால், நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெட்டு, மக்கள் அமைதியாக வாழவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும், அவர்களுக்கு, 5,000 ரூபாய் ஊக்கத் தொகை கொடுத்த முதல்வர், அவர்களிடம் வம்பு பண்ணும் நபர்களையும் கண்டித்து, சரியான தண்டனை வழங்க ஏற்பாடு பண்ணுவதே அவர்களுக்கு உண்மையிலே கொடுக்கும் ஊக்கத் தொகை.
'நான் ஹிந்துக்களுக்கு எதிரான முதல்வர் அல்ல, என் குடும்ப உறுப்பினர்கள் கோவிலுக்கு செல்வர்' என்று சொல்லி, ஹிந்து மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள சேகர் பாபுவை ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக நியமித்தார். அவரும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துகளை மீட்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்; நிறைய கோவில்களுக்கு கும்பாபிஷேகமும் செய்யப் போவதாக சொல்லி இருக்கிறார். இவையெல்லாம் ஹிந்து மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், ஒரு குடம் பாலில்
துளி விஷத்தைக் கலப்பது போல சிலரின் நடவடிக்கைகள் உள்ளன.

கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி, பொது மக்களுக்கு அசைவ பிரியாணி வழங்கினர். அவர்கள் அதை வழங்குவதற்கு தேர்ந்தெடுத்த இடம், கோவில் வாசல். ஹிந்துக்கள் அசைவம் சாப்பிட்டால், அன்று கோவிலுக்கு போக மாட்டார்கள். ஒரு சில சிறுதெய்வங்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை பலியிட்டாலும், அவை மிகவும் சொற்பமே. நிலைமை இப்படி இருக்க, கோவில் வாசலை அடைத்து பிரியாணி கொடுத்த விவகாரம் எப்படி முதல்வர் கண்ணிலிருந்து தப்பியது என தெரியவில்லை.கோவையில் தடுப்பூசிக்கு 'டோக்கன்' வழங்குவதில் கூட கட்சிக்காரர்களின் தலையீடு, மக்களை முகம் சுளிக்க வைக்கிறது. இதை விட கொடுமை, 'ஒரு கூட்டத்திற்கு, நாக்கில் சுளுக்கு எடுக்க வேண்டும்; ஒரு கூட்டத்திற்கு விரலில் சுளுக்கு எடுக்க வேண்டும்' என்று, 'வீடியோ' மூலம் ஒருவர் சொல்கிறார். இவர்களுக்கு எதிராக பேசினாலோ, எழுதினாலோ என்ன நடக்கும் என்பதை கோடிட்டு காட்டுகிறார்.
புதிய அரசு ஆட்சிக்கு வந்து, ஒரு மாதம் மட்டுமே முடிந்திருக்கிறது. அதற்குள், நிறைய களைச் செடிகள் முளை விட ஆரம்பித்திருக்கின்றன. இவற்றை இப்பவே பிடுங்கினால் நல்லது; விருட்சமாகி விட்டால், பயிர்களை வளர விடாமல் அழித்து விடும்.
இந்த மாதிரி ஆட்களின் செயல்பாடுகள் தொடர்ந்தால், ஆட்சியைப் பற்றிய மக்களின் மனதும் மாற வாய்ப்பிருக்கிறது. எனவே, களைகளை கிள்ளியெறிய முதல்வர் முயற்சி செய்ய வேண்டும்.


ஊடகங்களின் கள்ள மவுனம்!பி.சுந்தர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கைக்கு பின் நடந்தேறிய வன்முறை சம்பவத்தை, தமிழக அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் மிக எளிதாக கடந்து சென்றன. இது மிக மோசமான நிலை!
மேற்கு வங்கத்தில் நடந்த வெறியாட்டத்தில், கீழ்நிலையில் உள்ள ஹிந்துக்களே பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் பழங்குடியின மக்களே மிக அதிகம் பாதிக்கப்பட்டனர்.இந்த தாக்குதலானது, 12, 13ம் நுாற்றாண்டுகளில் நடந்த முகலாய படையெடுப்பிற்கு சற்றும் குறைவில்லாத ஒன்று.ஏராளமான குடும்பங்களை சூறையாடிய வன்முறை கும்பல், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தும், ஆண்களை கொடூரமாக கொன்றும் வேட்டை நாயாக திரிந்துள்ளது. மேலும் வீடு, கடைகளில் புகுந்து கொள்ளையடித்துள்ளது.
இதனால், மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான ஹிந்து குடும்பங்கள், அசாம் மாநிலத்திற்கு குடிபெயர்ந்து உள்ளன.இந்த தாக்குதலுக்குள்ளான குடும்பங்கள், பொருளாதார இழப்பை ஈடுசெய்து மீண்டு வர, பல ஆண்டுகள் பிடிக்கும்.இதில் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், மாநில அரசு, காவல் துறை, நீதிமன்றம் மற்றும் மனித உரிமை ஆணையம் ஆகியவற்றின் கள்ள மவுனமே!மாநில அரசின் ஆசியுடன் தான், இந்த வன்முறை நடந்துள்ளதோ என சந்தேகம் எழுகிறது. இந்த தாக்குதலை முன்னின்று நடத்திய கும்பல், எந்த ஆவணமும் இன்றி ஊடுருவிய வங்கதேச
குடியேறிகளே. அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் கொடுத்து, சட்டசபை தேர்தலில் ஓட்டளிக்க செய்துள்ளனர்.அந்த வங்கதேச குடியேறிகள், மேற்கு வங்கத்தில் பா.ஜ.,விற்கு தேர்தல் பணி செய்த பெண்களை பலாத்காரமும், கொலையும் செய்துள்ளனர். இவை எத்தகைய ஒரு குரூரமான செயல்!இது குறித்து எந்த தமிழக அரசியல்வாதிகளும் வாய் திறக்கவில்லையே... ஊடகங்கள் தங்கள் அறம் மறந்து, மரமாகி விட்டனவே!இத்தகைய ஒரு சம்பவம், பா.ஜ., ஆளும் மாநிலத்திலோ அல்லது சிறுபான்மையினருக்கு எதிராகவோ நடந்திருந்தால், ஊடக போராளிகளும், 'தமிழின' போர்வையாளர்களும் எப்படி எல்லாம் தாவி குதித்திருப்பர்?
இத்தகைய கொடுமை நடப்பது தெரிந்தும், அதை கண்டும் காணாமல் இருக்கும் அனைவரும் மரபணு மாற்றப்பட்ட மனிதர்களே!

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
12-ஜூன்-202108:19:39 IST Report Abuse
Darmavan மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை.மேற்கு வங்கத்தில்.பதில் சொல்ல யாரும் இல்லை கேவலம் மோடிக்கு பயமா தெரியவில்லை.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-ஜூன்-202106:15:23 IST Report Abuse
D.Ambujavalli அரசில் அமர்ந்தவுடன் ஆட்டம் போட தயாராகிவிட்டார்கள் இவர்களை அடக்க முதல்வராலும் முடியாது இதெல்லாம் எதிர்பார்த்ததுதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X