பொது செய்தி

தமிழ்நாடு

உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
அரூர்: அரூர் பகுதியில் உள்ள உரக்கடைகளில், வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா உத்தவுப்படி, அரூர் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ், வேளாண்மை அலுவலர் இளவரசி ஆகியோர், அரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனைக்கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உர விற்பனை

அரூர்: அரூர் பகுதியில் உள்ள உரக்கடைகளில், வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தர்மபுரி வேளாண்மை இணை இயக்குனர் வசந்தரேகா உத்தவுப்படி, அரூர் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் சகாயராஜ், வேளாண்மை அலுவலர் இளவரசி ஆகியோர், அரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனைக்கடைகளில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உர விற்பனை நிலையங்களில் இடுபொருள் விற்பனை விலை விபரம் குறித்த பட்டியலை விவசாயிகள் பார்க்கும்படி வைக்க வேண்டும். அனுமதி பெறாத நிறுவனங்களில், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை கொள்முதல் செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது. டி.ஏ.பி., உரம் ஒரு மூட்டை அரசு மானிய விலையான, 1,200 ரூபாய்க்கு விவசாயிகளுக்கு விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்திய அதிகாரிகள், கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தனர். கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தால், விவசாயிகள் வேளாண்மை உதவி இயக்குனர் தரக்கட்டுப்பாடு மொபைல் எண்- 94435 63977ல், புகார் தெரிவிக்கலாம் என வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X