சாலையை சீரமைக்க கோரிக்கை

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உப்பட்ட பாரதிபுரத்தில், மேடு, பள்ளமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பாரதிபுரம், 60 அடி சாலையில், ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த சாலையில், நாள்தோறும், 1,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த

தர்மபுரி: தர்மபுரி, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உப்பட்ட பாரதிபுரத்தில், மேடு, பள்ளமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி, இலக்கியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பாரதிபுரம், 60 அடி சாலையில், ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இந்த சாலையில், நாள்தோறும், 1,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. கடந்த ஆறு மாதத்துக்கு முன், இந்த சாலை வழியாக, குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்க, குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. குழாய் பதித்து பல மாதங்களாகியும், இன்று வரை பள்ளம் சரியாக மூடப்படாமல் உள்ளது. இச்சாலை மேடு, பள்ளமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதை சீரமைக்கக்கோரி, பஞ்., நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி, மேடு, பள்ளமாக உள்ள இச்சாலையை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X