சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்நாடகாவிலிருந்து மது கடத்திய 8 பேர் கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஒகேனக்கல்: கர்நாடகவில் இருந்து ஒகேனக்கல் காவிரியாற்று வழியாக மதுபாக்கெட்டுக்களை கடத்தி வந்து, கூடுதல் விலைக்கு விற்பணை செய்துவது அதிகரித்து உள்ளது. இதையெடுத்து, ஒகேனக்கல் போலீசார் மடம் செக்போஸ்டில் சோதணை சாவடி அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் இந்திர நகரை சேர்ந்த ஜெய்சங்கர், 30. தன் டுவீலரில், 100

ஒகேனக்கல்: கர்நாடகவில் இருந்து ஒகேனக்கல் காவிரியாற்று வழியாக மதுபாக்கெட்டுக்களை கடத்தி வந்து, கூடுதல் விலைக்கு விற்பணை செய்துவது அதிகரித்து உள்ளது. இதையெடுத்து, ஒகேனக்கல் போலீசார் மடம் செக்போஸ்டில் சோதணை சாவடி அமைத்து வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் இந்திர நகரை சேர்ந்த ஜெய்சங்கர், 30. தன் டுவீலரில், 100 கர்நாடக மதுபாக்கெட்டுக்களை கடத்தி வந்தது தெரியவந்தது. ஒகேனக்கல் போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த மதுபாக்கெட்டுக்கள் மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர்.

* கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் போலீசார் கண்ணன்டஹள்ளி கூட்ரோடில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், 28, டாட்டா ஏஸ் வானத்தின், 150 மது பாட்டில்களும், அதேபோல் கள்ளச்குறிச்சி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 28, ரமேஷ், 24 ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் கடத்திய, 50 மது பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்தனர்.


* தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கும்பாரஅள்ளி சோதனை சாவடியில், நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, தர்மபுரியை சேர்ந்த விஜயகுமார், தனசேகரன் மற்றும் சேலத்தை சேர்ந்த அறிவுமணி, நிவாஸ் ஆகிய நான்கு பேர் கர்நாடகா மாநில மதுபான பாக்கெட்டுகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவர்கள் நான்கு பேரையும், கைது செய்து, அவர்களிடமிருந்த, 190 மதுபானபாக்கெட்டுகள் மற்றும் இரு பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X