சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரிடியம் மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ராயக்கோட்டையில், இரிடியம் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும், 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் அன்பரசு, 26; பி.பி.ஏ., பட்டதாரி. இவரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட கும்பல் தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், அதை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் கொழிக்கும் என ஆசைவார்த்தை கூறி, அவரிடம், 10

கிருஷ்ணகிரி: ராயக்கோட்டையில், இரிடியம் தருவதாக மோசடி செய்த வழக்கில் மேலும், 2 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் அன்பரசு, 26; பி.பி.ஏ., பட்டதாரி. இவரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட கும்பல் தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், அதை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் கொழிக்கும் என ஆசைவார்த்தை கூறி, அவரிடம், 10 ஆயிரம் ரூபாய் வாங்கி, இரிடியத்தை கொடுக்காமல் ஏமாற்றியது. ராயக்கோட்டை போலீசில் அன்பரசு புகார் செய்தார். விசாரணையில், ஓசூரை சேர்ந்த மஞ்சுநாத், 40, தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த கரகூரை சேர்ந்த பொக்லைன் டிரைவர் ராஜா 32, சேலம் மாவட்டம், முத்துநாயக்கனஹள்ளியை சேர்ந்த சரவணகுமார், 30, அன்பரசுவை ஏமாற்றியது தெரிந்தது. ராஜாவை முன்தினம் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு பாஸ்பரஸ் இரிடியம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக இருந்த சரவணகுமார் நேற்று முன்தினம் இரவு ராயக்கோட்டை தக்காளி மண்டியிலும், மஞ்சுநாத் நேற்று காலை ராயக்கோட்டையிலும் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒரு இரிடியத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X