சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியுடன் தொடர்பு: தட்டி கேட்ட கணவனை தாக்கிய சிறுவன் கைது

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: காதல் மனைவியுடன் தொடர்பில் இருந்த சிறுவனை தட்டி கேட்ட கணவன் தாக்கப்பட்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொட்டகிரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 26;ஆட்டோ டிரைவர். இவர், சுல்தானா என்பவரை, 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுல்தானா, கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோல்சந்திரா பகுதியைச் சேர்ந்த டூவிலர்

கிருஷ்ணகிரி: காதல் மனைவியுடன் தொடர்பில் இருந்த சிறுவனை தட்டி கேட்ட கணவன் தாக்கப்பட்டார்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொட்டகிரி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், 26;ஆட்டோ டிரைவர். இவர், சுல்தானா என்பவரை, 3 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சுல்தானா, கர்நாடகா மாநிலம் பெங்களூரு கோல்சந்திரா பகுதியைச் சேர்ந்த டூவிலர் மெக்கானிக், 18 வயது சிறுவனுடன் தொடர்பு வைத்திருந்தார். கார்த்திக், இருவரையும் கண்டித்துள்ளார். கடந்த, 9ல், சுல்தானாவை பார்ப்பதற்காக சிறுவன், ஓசூர் தர்கா பகுதியிலுள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்றுள்ளார். அங்கு சென்ற கார்த்திக், சிறுவனிடம், தொடர்பை கைவிடும் படி அறிவுரை கூறியுள்ளார். ஆத்திரமடைந்த சிறுவன், கார்த்திக்கை அடித்து உதைத்து, மிரட்டல் விடுத்துள்ளார். கார்த்திக் புகார்படி, சிப்காட் போலீசார், சிறுவனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X