சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

உள் வாடகைக்கு விடப்படும் அரசு குடியிருப்புகள்!

Added : ஜூன் 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
உள் வாடகைக்கு விடப்படும் அரசு குடியிருப்புகள்!''தடுப்பூசியை மொத்தமா மடைமாத்தி விட்டுட்டாரு பா...'' என்றபடியே, அலைபேசி அரட்டையில் இணைந்தார், அன்வர்பாய்.''எந்த ஊருல, யாருவே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''திருப்பூர் மாநகராட்சிக்கு, சமீபத்துல ஒதுக்கப்பட்ட, 800 தடுப்பூசி மருந்தை, மூணு பனியன் கம்பெனிகளுக்கு, அதிகாரி ஒருத்தர் மொத்தமா அனுப்பிட்டாரு... இதனால,

டீ கடை பெஞ்ச்


உள் வாடகைக்கு விடப்படும் அரசு குடியிருப்புகள்!''தடுப்பூசியை மொத்தமா மடைமாத்தி விட்டுட்டாரு பா...'' என்றபடியே, அலைபேசி அரட்டையில் இணைந்தார், அன்வர்பாய்.

''எந்த ஊருல, யாருவே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''திருப்பூர் மாநகராட்சிக்கு, சமீபத்துல ஒதுக்கப்பட்ட, 800 தடுப்பூசி மருந்தை, மூணு பனியன் கம்பெனிகளுக்கு, அதிகாரி ஒருத்தர் மொத்தமா அனுப்பிட்டாரு... இதனால, தினமும் பொதுமக்கள், தடுப்பூசி கிடைக்காம நடையா நடந்துட்டு இருக்காங்க பா...

''இப்படி, மருந்தை மொத்தமா அனுப்ப, உயர் அதிகாரி அனுமதி எதுவும் வாங்கலை... இது, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் காதுக்கும் போயிருக்குது... இது சம்பந்தமா, இப்ப விசாரணை நடந்துட்டு இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.

''நேத்து கண்ணன் பேசினாரு... அவர், ரெண்டாவது 'டோஸ்' தடுப்பூசி போட்டுட்டதா சொன்னாரு...'' என தகவல் பரிமாறிய அண்ணாச்சியே, ''நடவடிக்கையில பாரபட்சம் காட்டுதாவ வே...'' என, அடுத்த
தகவலுக்கு மாறினார்.

''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''பத்திரப்பதிவு துறையில பணம் தண்ணியா புழங்கும்... சில பசையான இடங்களுக்கு, உரியவங்களை, 'கவனிச்சு' போகிற சார் - பதிவாளர்கள், கொடுத்ததுக்கு மேல பல மடங்கு அள்ளிடுவாவ வே...

''இப்படி அதிகமா கைநீட்டுற சார் - பதிவாளர்கள் மேல, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் போகும்... அப்படி புகார் வர்ற சார் - பதிவாளர் அலுவலகங்கள்ல, போலீசார் அதிரடி சோதனை
நடத்துவாவ வே...

''அப்ப, கணக்குல வராத பணம் நிறைய பிடிபட்டா, அந்த சார் - பதிவாளரை, வேற இடத்துக்கு மாத்திடுவாவ... ஆனா, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு போன்ற சில இடங்கள்ல, இப்படி பணத்தோட சிக்குன சார் - பதிவாளர்களை மட்டும், அதே இடங்கள்ல பணியில தொடர விட்டிருக்காவ... எல்லாம், அரசியல் செல்வாக்கு தான் காரணம்னு சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.உடனே, ''உள் வாடகைக்கு விட்டு சம்பாதிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''எந்த கட்டடத்தை சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''கிருஷ்ணகிரியில, புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் இருக்கு... இதுல, அரசு ஊழியர்கள், அதிகாரிகள் பலர் குறைஞ்ச வாடகைக்கு வீடுகள் வாங்கியிருந்தாலும், அவா தங்கறது இல்லை ஓய்...

''பதிலா, கூடுதல் தொகைக்கு உள்வாடகைக்கு விட்டுடறா... மின் வாரிய பொறியாளர் ஒருத்தர், சமீபத்துல தனக்கு ஒதுக்கிய வீட்டை, முன்பின் தெரியாத ஒருத்தருக்கு உள் வாடகைக்கு விட, அவர் அந்த வீட்டுல ஏதோ கசமுசா பண்ணி, போலீஸ் வரை பிரச்னை போயிடுத்து ஓய்...

''இதெல்லாம், வாரிய அதிகாரிகளுக்கு தெரியுமான்னு கேக்காதேள்... 'கவனிப்பு' காரணமா, கண்ணையும், காதையும் மூடிண்டு இருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.

''நம்ம ஊருல ஊரடங்கு, பேருக்கு தான் இருக்குதுங்க... எல்லா கடைகளையும், எல்லாரும் திறந்து தான் வச்சிருக்காங்க... நம்ம டீக்கடையை மட்டும் ஏன் மூடி வச்சிருக்காங்க...'' என, அந்தோணிசாமி அங்கலாய்க்க, அரட்டை திசை மாறியது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
12-ஜூன்-202109:34:56 IST Report Abuse
a natanasabapathy டி கடயால் அரசுக்கும் தலைவர் களுக்கும் வருமானம் கிடையாது சாராய கதையால் இருவருக்கும் அமோக வருமானம் சாராய சக்கரவர்த்தி ஒருவர் இலங்கையில் 26000 கோடி முதலீடு செய்துள்ளதாக செய்தி வந்தது உண்மையாநாள் சாராயக்கடை திறப்பின் அவசியம் புரியும்
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
12-ஜூன்-202107:32:28 IST Report Abuse
அம்பி ஐயர் அந்தோணிசாமிக்குத் தெரியாதா....???? அவங்க வழக்கமா குடிக்கிற டீக்கடை திறந்து தான் இருக்கு... என்ன ஒண்ணு வெளில பர்தா போட்டு மூடியிருக்கும்.... நாளைலருந்து டீ குடிச்சுக்கிட்டே பேசச் சொல்லுங்க.....
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12-ஜூன்-202106:09:22 IST Report Abuse
D.Ambujavalli தனியார் மருத்துவ மனைகள் ஆயிரம், ஆயிரத்தைநூறு என்று தடுப்பூசிக்கு விலை வைக்கிறார்கள் அதில் கமிஷன் பார்ப்பதை விட்டு, ஏழைகளுக்கு இலவசம் எல்லாம் வேலைக்கு ஆகுமா? பிரதமர் சும்மா கோர்ட்டுக்கு பதில் சொல்லத்தான் 'இலவச' அறிவிப்பு செய்தார் போலும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X