பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து சரிவு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யாததால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பரவலாக மழை பெய்தது. மேலும் கர்நாடகா மாநிலத்திலும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நான்கு நாட்களாக, 560 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. மழை இல்லாததால்,

கிருஷ்ணகிரி: கடந்த மூன்று நாட்களாக மழை பெய்யாததால், கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பரவலாக மழை பெய்தது. மேலும் கர்நாடகா மாநிலத்திலும், தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியிலும் மழை பெய்ததால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. நான்கு நாட்களாக, 560 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. மழை இல்லாததால், நீர்வரத்து நேற்று, 341 கன அடியாக குறைந்துள்ளது. ஆனால் அணையில் இருந்து வழக்கமாக, 560 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான, 44.28 அடியில், நேற்று, 39.03 அடியாக குறைந்துள்ளது. கெலவரப்பள்ளி அணையில் இருந்து கடந்த ஐந்து நாட்களாக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நேற்று முன்தினம், 348 கன அடி தண்ணீர் வந்த நிலையில் நேற்று, 119 கன அடியாக குறைந்தது. கே.ஆர்.பி., அணையின் நீர்மட்டம் மொத்த உயரமான, 52 அடியில், நேற்று, 41.45 அடியாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X