பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஜூன் 12, 1895கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவில் உள்ள மாறாங்கோணத்தில், 1895, ஜூன் 12ம் தேதி பிறந்தவர், நேசமணி. ஆதிக்க ஜாதியினரின் அடக்குமுறையை நேரடியாக அனுபவித்தவர், இவர். இளம் வயதிலேயே, சமூக விடுதலைக்காக போராட துவங்கினார்.திருவனந்தபுரம் சட்டக் கல்லுாரியில், பி.எல்., பட்டம் பெற்று, நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1943ல், நாகர்கோவில் 'பார்

இதே நாளில் அன்று


ஜூன் 12, 1895



கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலுகாவில் உள்ள மாறாங்கோணத்தில், 1895, ஜூன் 12ம் தேதி பிறந்தவர், நேசமணி. ஆதிக்க ஜாதியினரின் அடக்குமுறையை நேரடியாக அனுபவித்தவர், இவர். இளம் வயதிலேயே, சமூக விடுதலைக்காக போராட துவங்கினார்.திருவனந்தபுரம் சட்டக் கல்லுாரியில், பி.எல்., பட்டம் பெற்று, நாகர்கோவில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1943ல், நாகர்கோவில் 'பார் அசோசியேஷன்' தலைவராகவும், நகர்மன்ற தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.நாடு விடுதலை அடைந்த பின், கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்திருந்த கன்னியாகுமரி மாவட்டத்தை, தமிழகத்தோடு இணைப்பதற்கு பல போராட்டங்கள்
நடத்தி, வெற்றி கண்டார். 1962, 1967 லோக்சபா தேர்தல்களில், கன்னியாகுமரி தொகுதியில், காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1968, ஜூன் 1ம் தேதி, தன் 72வது வயதில் காலமானார்.மார்ஷல் நேசமணி பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X