பொது செய்தி

தமிழ்நாடு

மானாவாரி நிலத்தில் உழவு பணி தீவிரம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு லட்சம் ஏக்கரில் மானாவாரி பயிர்களான, மக்காச் சோளம், ராகி, நிலக்கடலை, துவரை, உள்ளிட்ட தானியவகைகளும் பயிரிடுவது வழக்கம். தற்போது தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கியுள்ளது. மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்று உபரி நீர், கால்வாய் மூலம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஒரு லட்சம் ஏக்கரில் மானாவாரி பயிர்களான, மக்காச் சோளம், ராகி, நிலக்கடலை, துவரை, உள்ளிட்ட தானியவகைகளும் பயிரிடுவது வழக்கம். தற்போது தென்மேற்கு பருவ மழை காலம் துவங்கியுள்ளது. மாவட்டத்தில், தென்பெண்ணை ஆற்று உபரி நீர், கால்வாய் மூலம் சென்றாலும், 80 சதவீத நிலம், வானம் பார்த்த பூமியாக உள்ளது. இதனால் பல பகுதிகளில் மழை வந்தால் மட்டுமே, விவசாயம் செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. பெய்யவுள்ள தென்மேற்கு மழைக்கு முன்பாக விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுதுள்ளனர். ஓசூர், தளி தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ராகியும் , வேப்பனஹள்ளி, குருபரப்பள்ளி கிருஷ்ணகிரி பகுதிகளிலுள்ள மேட்டுப்பாங்கான நிலங்களில் நிலக்கடலை உள்ளிட்ட தானிய வகைகளையும் பயிரிட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி அணையிலிருந்து, பாரூர் ஏரிக்கு தண்ணீர் திறந்துள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் தொடர் மழை பொழியும் பட்சத்தில் அடுத்த மாதம் அணையிலிருந்து இடது வலது புற கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம், 9,000 ஏக்கருக்கு, 120 நாட்கள் தண்ணீர் கிடைக்கும். விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் களை எடுத்தல், ஏர் உழுதல், நாற்று நடுதல் உள்ளிட்ட உழவு பணிகளுக்கு தங்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X