பொது செய்தி

தமிழ்நாடு

100 ஆக்சிஜன் சிலிண்டருக்கான தொகையை வழங்கிய தனியார் நிறுவன ஊழியர்கள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ஓசூர்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளை தவிர்க்க, 100 ஆக்சிஜன் சிலிண்டருக்கான ரீஃபிலிங் தொகையை, தனியார் நிறுவன ஊழியர்கள் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.ஓசூர் சிப்காட் பகுதியில் ஆசிர்வாத் பைப் என்ற உலோக குழாய் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இதில் பணியாற்றி வந்த ராஜேஷ்

ஓசூர்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளை தவிர்க்க, 100 ஆக்சிஜன் சிலிண்டருக்கான ரீஃபிலிங் தொகையை, தனியார் நிறுவன ஊழியர்கள் அரசு மருத்துவமனைக்கு வழங்கினர்.


ஓசூர் சிப்காட் பகுதியில் ஆசிர்வாத் பைப் என்ற உலோக குழாய் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு, 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இதில் பணியாற்றி வந்த ராஜேஷ் என்ற ஊழியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் வேதனையடைந்த அவருடன் பணியாற்றிய ஊழியர்கள், இதுபோன்று ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர் இழப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், 100 சிலிண்டர்களில் ஆக்சிஜன் நிரப்புவதற்கான தொகை, 35 ஆயிரத்து 865 ரூபாய்க்கான காசோலையை, ஓசூர் ஆர்.ஐ., குணசேகரன் முன்னிலையில், அரசு தலைமை மருத்துவர் டாக்டர் பூபதியிடம் நன்கொடையாக வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X