பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் 10 நாட்களில் 45 பேர் பலி; சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டுகோள்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கடந்த, 10 நாட்களில், 45 பேர் கொரோனாவிற்கு பலியானதால், பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.கொரோனா பரவலைத் தடுக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மே, 24 முதல், ஏழு நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், மளிகை, காய்கறி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் குறையாததால், ஜூன், 1 முதல் ஏழு

கிருஷ்ணகிரி: கடந்த, 10 நாட்களில், 45 பேர் கொரோனாவிற்கு பலியானதால், பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


கொரோனா பரவலைத் தடுக்க கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மே, 24 முதல், ஏழு நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், மளிகை, காய்கறி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் குறையாததால், ஜூன், 1 முதல் ஏழு நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில், மளிகை, காய்கறிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. இந்நிலையில், கடந்த மாதம், 850 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், முழு ஊரடங்கால் படிப்படியாக, 280 ஆக குறைந்துள்ளது. ஆனால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. கடந்த, 10 நாட்களில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 45 பேர் கொரோனாவிற்கு இறந்துள்ளனர். இதற்கு காரணம் பொதுமக்கள் சரியான முறையில் ஊரடங்கை கடைபிடிக்கவில்லை என்றும், கொரோனாவில் தாக்கம் குறைந்திருந்தாலும், இரண்டாவது அலையில் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் சுய கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X