பொது செய்தி

தமிழ்நாடு

தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு; மண்டிகளில் மாங்காய் ஏலம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால், தற்போது மண்டிகளில் மாங்காய் ஏலம் விடப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், போச்சம்பள்ளி, சூளகிரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில், 57 ஆயிரம் ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. மல்கோவா, செந்தூரா, இமாம் பசந்த், பெங்களூரா, மல்லிகா, பீத்தர், பங்கனப்பள்ளி உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட மா ரகங்கள் விளைவிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால், தற்போது மண்டிகளில் மாங்காய் ஏலம் விடப்படுகிறது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பர்கூர், போச்சம்பள்ளி, சூளகிரி, ஓசூர், கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில், 57 ஆயிரம் ஏக்கரில் மாங்காய் சாகுபடி செய்யப்படுகிறது. மல்கோவா, செந்தூரா, இமாம் பசந்த், பெங்களூரா, மல்லிகா, பீத்தர், பங்கனப்பள்ளி உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட மா ரகங்கள் விளைவிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜன., பிப்., மாதங்களில், மா பூக்கள் பூக்கத் தொடங்கி, மார்ச், ஏப்., மாதங்களில் காய்க்கத் தொடங்கும். மே, ஜூன் மாதங்களில் அறுவடை செய்து விற்பனை செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக அறுவடையும், விற்பனையும் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து, மாங்கூழ் தொழிற்சாலைகள் போதிய அளவில் இயங்காத காரணத்தால் உரிய விலை கிடைக்கவில்லை. தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கால், மா விவசாயிகள் அறுவடை செய்த மாங்காய்களை காவேரிப்பட்டணத்தில் உள்ள மாங்காய் மண்டிகளுக்கு கொண்டுவரத் துவங்கி உள்ளனர். வெளி மாவட்ட வியாபாரிகள் அதிகம் வராத நிலையில் உள்ளூர் வியாபாரிகள் மல்கோவா, 25 கிலோ கொண்ட ஒரு கூடையை, 1,400 முதல், 1,800 ரூபாய் வரை ஏலம் எடுத்து உள்ளூரில் சில்லரையாக விற்பனை செய்கின்றனர். மற்ற ரகங்களுக்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X