பொது செய்தி

தமிழ்நாடு

கொல்லிமலை சிற்றருவியில் தண்ணீர் பெருக்கெடுப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
நாமக்கல்: கொல்லிமலையில் தொடர் மழையின் காரணமாக சிற்றருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலாத்தலமாக கொல்லிமலை அமைந்துள்ளது. இங்கு செல்வதற்காக, காரவள்ளி அடிவாரத்தில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, எட்டுக்கை அம்மன், அரப்பளீஸ்வரர் கோவில், தவரவியல் பூங்கா, நம்ம அருவி, மாசிலா அருவி உள்ளிட்ட

நாமக்கல்: கொல்லிமலையில் தொடர் மழையின் காரணமாக சிற்றருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், சுற்றுலாத்தலமாக கொல்லிமலை அமைந்துள்ளது. இங்கு செல்வதற்காக, காரவள்ளி அடிவாரத்தில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து செல்ல வேண்டும். ஆகாயகங்கை நீர்வீழ்ச்சி, எட்டுக்கை அம்மன், அரப்பளீஸ்வரர் கோவில், தவரவியல் பூங்கா, நம்ம அருவி, மாசிலா அருவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர். ஊரடங்கு தொடர்வதால் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த தொடர் மழைக்கு, நீர்விழ்ச்சிகள் அனைத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அரப்பளீஸ்வரர் கோவில் பகுதியில் உள்ள அருகே உள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சிக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனருகே உள்ள சிற்றருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அந்த அருவிக்கு செல்லும் பாதையும் மூடும் அளவிற்கு தண்ணீர் அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் இல்லாமல் சிற்றருவி வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X