பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடை செடிகளுக்கு நுண்ணூட்ட உரம் தெளிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
எருமப்பட்டி: எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதிக?ளில் வைகாசி மாதம் பெய்யும் கோடை மழை இந்தாண்டு முன்னதாகவே சித்திரை மாதத்தில் பெய்ததால் காளிசெட்டிப்பட்டி, திப்ரமாதேவி,பவித்திரம்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி சாகுபடியாக நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். இதே போல், இந்த வைகாசி மாதமும் எருமப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து

எருமப்பட்டி: எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதிக?ளில் வைகாசி மாதம் பெய்யும் கோடை மழை இந்தாண்டு முன்னதாகவே சித்திரை மாதத்தில் பெய்ததால் காளிசெட்டிப்பட்டி, திப்ரமாதேவி,பவித்திரம்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் மானாவாரி சாகுபடியாக நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். இதே போல், இந்த வைகாசி மாதமும் எருமப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் கடந்த சில நாட்களாக, களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது செடிகளுக்கு ஊட்டசத்து தரக்கூடிய நுண்ணூட்ட சத்துள்ள உரமிடும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, எருமப்பட்டி வேளாண் துறை அலுவலகத்தில் இந்த பகுதி விவசாயிகளுக்காக, 50 சதவீத மானிய விலையில் நுண்ணூட்ட உரம் வழங்கப்படுகிறது. இந்த உரத்தை விவசாயிகள் வாங்கி, ஏக்கருக்கு, ஐந்து கிலோ என்ற விகிதத்தில் நிலக்கடலை செடிகளில் தெளித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X