பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி வழங்க கோரிக்கை மனு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
நாமக்கல்: அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசிகள் வழங்க வலியுறுத்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சித்ராவிடம், எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையிலான மா.கம்யூ., கட்சியினர் மனு அளித்தனர். அதன் விபரம்: எலச்சிபாளையம், கொன்னையார், கோக்கலை, இலுப்புலி, அகரம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பகுதியில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் போதுமான

நாமக்கல்: அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசிகள் வழங்க வலியுறுத்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சித்ராவிடம், எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் தலைமையிலான மா.கம்யூ., கட்சியினர் மனு அளித்தனர். அதன் விபரம்: எலச்சிபாளையம், கொன்னையார், கோக்கலை, இலுப்புலி, அகரம் உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பகுதியில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில் போதுமான தடுப்பூசிகள் மருத்துவமனைக்கு வருவதில்லை. இதனால், பொதுமக்கள், 10 கி.மீ., தொலைவிற்கு சென்று தடுப்பூசி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, எலச்சிபாளையத்தை மையமாக கொண்டு செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரண்டு வகையான தடுப்பூசிகள் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X