கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கொரோனா பாதித்த குடும்பத்திற்கு நிதியுதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் கொரோனா பாதித்த குடும்பத்திற்கு நிதியுதவி

Added : ஜூன் 11, 2021
Share
நாமகிரிப்பேட்டை: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், கொரோனாவால் உயிரிழக்கும், தி.மு.க., நிர்வாகிகளின் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதியாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் அறிவித்திருந்தார். மங்களபுரம் ஊராட்சி செயலாளர் காசி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், 50 ஆயிரம் ரூபாய்

நாமகிரிப்பேட்டை: நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில், கொரோனாவால் உயிரிழக்கும், தி.மு.க., நிர்வாகிகளின் குடும்பத்திற்கு, குடும்ப நல நிதியாக, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என, மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் அறிவித்திருந்தார். மங்களபுரம் ஊராட்சி செயலாளர் காசி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதுடன், 50 ஆயிரம் ரூபாய் நிதியை, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்ரமணியன், மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் வழங்கினர். அமைச்சர் மதிவேந்தன், ஒன்றிய செயலாளர் ராமசுவாமி, முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஏ.கே.பி.மணி, மருத்துவ அணி துணை அமைப்பாளர் பாண்டியன், மாணவரணி பிரகாசம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். முன்னதாக, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வென்டிலேட்டர்கள் வழங்கிய நன்கொடைதாரர்களான வநேத்ரா முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, சண்முகா எலக்ட்ரிகல்ஸ், கல்யாண் ஜூவல்லரி ஆகிய நிறுவனங்களுக்கு அமைச்சர் சுப்ரமணியன் நினைவு பரிசு வழங்கினார். முத்துவேல் ராமசுவாமி, குணசேகரன், அருள், ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X