சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராயம் காய்ச்சியவர் கைது; 300 லிட்டர் ஊறல் அழிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
ப.வேலூர்: கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்தி ப.வேலூர் அடுத்த புது வெங்கரை அம்மன் கோவில் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக, டி.எஸ்.பி.,ராஜாரணவீரனுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உள்ளிட்ட போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள தோட்டத்தின் மையப்பகுதியில் இருந்த குடிசை வீட்டில்

ப.வேலூர்: கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனை சாதகமாக பயன்படுத்தி ப.வேலூர் அடுத்த புது வெங்கரை அம்மன் கோவில் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் சாராயம் காய்ச்சுவதாக, டி.எஸ்.பி.,ராஜாரணவீரனுக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் லட்சுமணன் உள்ளிட்ட போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள தோட்டத்தின் மையப்பகுதியில் இருந்த குடிசை வீட்டில் சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. அதற்குப் பயன்படுத்திய, 300 லிட்டர் ஊறல் சாராயம் அழிக்கப்பட்டு, 18 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கள்ளிபாளையத்தை சேர்ந்த சசிமணி, 25, என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவரை, ப.வேலூர் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X