பொது செய்தி

தமிழ்நாடு

காற்றில் பறந்தது ஊரடங்கு உத்தரவு; கரூரில் போக்குவரத்து நெரிசல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கரூர்: மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு வாகன நடமாட்டம் இருந்தது.தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மே, 24 முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி கரூர் மாவட்டத்தில், பல சரக்கு கடை, காய்கறி கடை,

கரூர்: மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு வாகன நடமாட்டம் இருந்தது.


தமிழகத்தில் இரண்டாம் கட்ட கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மே, 24 முதல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தொற்று குறைந்த மாவட்டங்களுக்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி கரூர் மாவட்டத்தில், பல சரக்கு கடை, காய்கறி கடை, நடைபாதை கடை, பூக்கடைகள், காலை, 6:00 மணி முதல் மாலை, 5:00 மணி முதல் திறக்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை சட்டை செய்யாமல் இரு சக்கர வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் சர்வ சாதாரணமாக சுற்றி வருவதை காண முடிகிறது. குறிப்பாக, கரூர் பஸ் ஸ்டாண்ட், ஜவகர் பஜார், கோவை சாலை, காந்திகிராமம், தான்தோன்றிமலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு வாகன நடமாட்டம் இருந்தது. இங்கு, முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X