பொது செய்தி

தமிழ்நாடு

சடலத்தை 'பேக்கிங்' செய்ய வசூல்: அரசு மருத்துவ கல்லூரியில் அவலம்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கரூர்: கரூர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இறந்தவர் சடலங்களை, 'பேக்கிங்' செய்ய, 1,000 ரூபாய் பணம் கேட்டு நிர்ப்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 400க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு, இதர காரணங்களுக்காக நோயாளிகள் இறக்கின்றனர். சடலத்தை மருத்துவ முறைப்படி, 'பேக்கிங்' செய்து,

கரூர்: கரூர், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இறந்தவர் சடலங்களை, 'பேக்கிங்' செய்ய, 1,000 ரூபாய் பணம் கேட்டு நிர்ப்பந்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.


கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், 400க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு, இதர காரணங்களுக்காக நோயாளிகள் இறக்கின்றனர். சடலத்தை மருத்துவ முறைப்படி, 'பேக்கிங்' செய்து, மின்மயானத்தில் எரியூட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சடலத்தை 'பேக்கிங்' செய்யவும், அவற்றை தனியார் ஆம்புலன்சில் வைத்து அனுப்பி வைக்கவும், பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, அரசு மருத்துவக்கல்லூரி பணியாளர்கள் கூறியதாவது: மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், 2020 மார்ச்சில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் அனுமதிக்கப்பட்டனர். இங்கு, தூய்மை பணி உட்பட பல்வேறு பணிகளை மேற்கொள்ள, பல்நோக்கு சுகாதார பணியாளர்கள், 45 பேர் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். தற்போது, கொரோனா தொற்று மற்றும் பிற காரணங்களால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களின் உடலை, 'பேக்கிங்' செய்து கொடுக்கும் பணி, இந்த பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு, 1,000 ரூபாய் வரை லஞ்சம் கேட்டு வருகின்றனர். பணம் கொடுக்க மறுத்தால், இறந்தவர்களில் உடல்களை கொடுக்க மறுக்கின்றனர். இதனால், சுகாதார பணியாளர்களுக்கும், இறந்தவர்களின் உறவினர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது. பணம் கொடுக்க முடியாத ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், உடலை வேண்டாம் என்று சொல்லி விட்டு செல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக, மருத்துவமனை நிர்வாகமே, அந்த உடலை அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மட்டுமல்லாது, கூட்டு வைத்துள்ள தனியார் ஆம்புலன்ஸ்சில் உடலை அனுப்பி வைக்கின்றனர். அதற்கும் கூட, இவர்களுக்கு கமிஷன் கிடைக்கிறது. இந்த நேரத்தில், முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் பணிபுரிய வேண்டும். சொந்தங்களை பறிகொடுத்து தவிப்பவர்களிடம் மனிநேயத்துடன் இருக்க வேண்டிய நேரத்தில், பணம் பிடுங்கும் செயலில் ஈடுபடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X