பொது செய்தி

தமிழ்நாடு

நீர்வழித்தடம் தூர்வாரும் பணி: கலெக்டர் ஆய்வு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கரூர்: கரூர் மாவட்டத்தில் புகளுர் வாய்க்கால் செல்லும் நொய்யல், மரவாப்பாளையம், சேமங்கி மற்றும் கட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்கள் தூர் வாரும் பணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது: மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாதுகாப்புக்கோட்டத்தில் உள்ள நீர்வழித்தடங்களில் இரண்டு வாய்க்கால்கள், எட்டு வடிகால் வாரிகள் ஆகியவை, 1.60

கரூர்: கரூர் மாவட்டத்தில் புகளுர் வாய்க்கால் செல்லும் நொய்யல், மரவாப்பாளையம், சேமங்கி மற்றும் கட்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்வழித்தடங்கள் தூர் வாரும் பணியை கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார்.


அப்போது அவர் கூறியதாவது: மாவட்டத்தில் காவிரி ஆற்றுப் பாதுகாப்புக்கோட்டத்தில் உள்ள நீர்வழித்தடங்களில் இரண்டு வாய்க்கால்கள், எட்டு வடிகால் வாரிகள் ஆகியவை, 1.60 கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி நடந்து வருகிறது. புகளுர், நெரூர் ஆகிய பாசன வாய்க்கால்கள், 25.6 கி.மீ., நீளத்திற்கு தூர்வாரப் படுகின்றன. வதியம், கே.பேட்டை, மருதாண்டம் வடிகால் வாரிகள், பனையூர் வடிகால் வாரிகள், இனுங்கூர் வாரி, சிவாயம் வாரி, வளையப்பட்டி வாரி, குளித்தலை காட்டு வாரி ஆகியவை, 35 கி.மீ., நீளத்திற்கு தூர்வாரப்படுகின்றன. தூர்வாரும் பணியினை காவிரியில் பாசனத்திற்கு நீர் திறப்புக்கு முன் முடிக்க வேண்டும். வடிகால் வாரிகள் தூர்வாரும் பணியினை பருவ மழைக்கு முன்பு முடிக்கவும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை காவிரி ஆற்றுப் பாதுகாப்புக்கோட்ட உதவிப்பொறியாளர்கள் ஸ்ரீதர், கார்த்திக், தாசில்தார் செந்தில் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X