பொது செய்தி

தமிழ்நாடு

மணல் குவாரி விவகாரம்: முதல்வர் விளக்கமளிக்க வலியுறுத்தல்

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கரூர்: 'மணல் குவாரி விவகாரத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையை, முதல்வர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், 2013 முதல், 33 ஆறுகளிலும் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இங்கு, சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடந்து வந்தது. இதற்கு எதிராக பல்வேறு

கரூர்: 'மணல் குவாரி விவகாரத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையை, முதல்வர் ஸ்டாலின் தெளிவுப்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், 2013 முதல், 33 ஆறுகளிலும் மணல் குவாரி செயல்பட்டு வந்தது. இங்கு, சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடந்து வந்தது. இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் மற்றும் நீதிமன்ற உத்தரவு பின், 'படிப்படியாக அனைத்து மணல் குவாரிகளையும் மூடுவோம்' என, அரசு அறிவித்தது. ஆற்றுமணலுக்கு மாற்றாக, எம் சாண்ட் மற்றும் வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வது போன்ற நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. மேலும், அ.தி.மு.க., கட்சி ஆதரவுடன், மாபியா கும்பல் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். தற்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மூலமாக, இந்த கும்பலுக்கு மீண்டும் மணல் குவாரி உரிமம் கிடைக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த கும்பலில் இருந்து, தமிழக அரசின் மணல் குவாரி ஒப்பந்தத்தில் ஈடுபடப்போவதில்லை அறிவிப்பு வந்துள்ளது. இருந்தபோதும், மணல் குவாரி அமைக்க, 300 கோடி ரூபாய் கைமாறியிருப்பதாக ஆடியோ உரையாடல் ஒன்று, சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. மேலும், புதுக்கோட்டையை சேர்ந்த மணல் வியாபாரி கரிகாலன் என்பவருக்கு, அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் ஆகியோர் பட்டு சால்வை அணிவித்த போட்டோ வெளியாகிள்ளது. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றவுடன், மணல் குவாரி அனுமதி குறித்து பல்வேறு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மணல் குவாரி விவகாரத்தில் என்ன நடக்கிறது என்ற உண்மையை நாட்டு மக்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X