பிரதான சாலைகளில் வாகனம் நிறுத்தம்: போக்குவரத்து நெரிசலால் தவிப்பு

Added : ஜூன் 11, 2021
Share
Advertisement
கரூர்: பிரதான சாலைகளில் வாகனம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.கரூர், வையாபுரிநகர் பகுதியில் செங்குந்தபுரம் குறுக்கு தெரு, எம்.ஜி.,ரோடு போன்ற இடங்களுக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதிக்கு செல்லும் சாலையாக இருக்கிறது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் ஏராளமான பயணிகள் வந்து செல்வர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த

கரூர்: பிரதான சாலைகளில் வாகனம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


கரூர், வையாபுரிநகர் பகுதியில் செங்குந்தபுரம் குறுக்கு தெரு, எம்.ஜி.,ரோடு போன்ற இடங்களுக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த பகுதிக்கு செல்லும் சாலையாக இருக்கிறது. இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் ஏராளமான பயணிகள் வந்து செல்வர். போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த வையாபுரிநகர் பஸ் ஸ்டாப் அருகே கார்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால் திரும்ப முடியாமல் வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். நீண்ட நேரம் கார் பார்க்கிங் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளிகள் திறக்கும் போது, அதன் வாகனங்கள் அதிக அளவில் செல்லும். இங்கு, பார்க்கிங் செய்வதை தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்துநெரிசலின்றி சென்ற வர ஆவண செய்யவேண்டும் என, பொதுமக்கள், வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X